எழும்புத்துண்டுக்கு வாலாட்டுவதுதான் மஇகாவின் மாபெரும் சாதனை!

கண்ணம்மா: கோமளி அவர்களே, இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மாஇகாவின் மபெரும் சாதனையாக எதை கருதுவீர்?

கோமாளி: கண்ணம்மா, நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர் என்பார்கள். மஇகாவின் தொடக்கம் இனவாதம் ஆனால் தேசியத்தன்மை கொண்டதாக இருந்தது. அது ஒரு பணக்காரர்களின் கட்சி. அதில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டினார்கள்.

இவர்களை மிதவாத அரசியல்வாதிகள் என அழைக்கலாம். மிதவாதம் என்றால் பெரும்பான்மை என்ற சனநாயக கோட்பட்டிற்கு ஏற்ப வாலட்டுவது.

இந்தியர்கள் அதிலும் பெரும்பான்மையானவர்கள், சுமார் 90% தமிழர்கள். இவர்கள் தொழிலாளர்கள். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேசிய சிந்தனைவாதம் ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்ற வகையில் மட்டுமே இருந்தது. எனவே, கூலிகளாக கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் சுயநிர்ணய அரசியல் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு அவர்களின் சமூக பிரச்சனைகளை கையாளுவதிலேயே காலத்தை ஓட்டினார்கள் இந்த மஇகா மண்டைகள்.

கண்ணம்மா, இதனால் இந்தியர்கள் விடுதலை கிடைக்கும் வரையில், அது இந்தியாவிற்காக போரடிய போரட்டமாகவே கருதப்பட்டது. அதனால் அவர்கள் மேம்பாடு செய்த நாட்டில் உரிமைகள் வேண்டும் என்ற வேற்கையற்ற நிலைதான் உருவாக்கப்பட்டது.

ஆனால், மலாயாவை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவித்து அதை தங்களது நாடாக உருவாக்க மாற்று அரசியல் சிந்தாந்தம் கொண்ட தரப்பினர் தொழிலாளர்களை அதில் இணைத்தனர். இவர்களது தாக்கம்தான் மஇகாவின் மாறுபட்ட இந்தியர் உரிமைச் சிந்தனைக்கு வித்திட்டது. ஆனால், இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு ஆங்கிலேயர்கள் உண்டாக்கிய திருப்பு முனை அரசியல் இனவாத்தை கொண்டு மக்களை பிரித்தது. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் என்பதுபோல் அவசர காலச் சட்டத்தை போட்டு மக்களின் அரசியல் வேட்கயை ஒடுக்கியது.

அப்புறம் என்ன, எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா என்ன? மிதவாதம் என்ற போர்வையில் கூட்டு அரசாங்கம், அதற்கு மஇகா துணை. எல்லாமே அப்படியே, ஆனால் நாட்டுக்கு விடுதலை. தோட்டப்புறங்களில் சிக்கிய மக்களை பிரதிநிதிப்பதாக பல் பிடுங்கப்பட்ட தொழிச் சங்கம், ஒருதலைப்பட்சமான அரசமைப்பு திணிக்கப்பட்டது. விடுதலையை நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்ற புலம்பல் உழைக்கும் மக்களிடையே இன்னமும் ஓயவில்லை.

இந்தியர்களுக்கு நிழல் ஓர் அடிதான், நிம்மதியும் அதுக்குள்ளே என்பதை நிலைபடுத்த மஇகா மிதவாத வகைமுறையில்  பயன்படுத்தப்பட்டது. இதில் மோசமான காலம் மாகதீரும் சாமி வேலுவும் இணந்த காலம்தான். இருவருமே மாகத்திறமையானவர்கள்.

நிலைத்தன்மைதான் முக்கியம் என்று சனநாயகத்தை கொன்றனர். இதில் மாகாதீர் தனது இனத்தை வலுவாக்கினார். சாமிவேலு இந்தியர்களை வலுவாக்கினார். சாமானிய மக்களை மஇகாவில் இணைத்தவர் சாமிவேலுதான்.

மாபெரும் சாதனையான இதை வேதனையாக்கியவரும் அவரேதான். எழும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் சமூகமாக உருவாக்கியதும் அவர்தான்.