அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, அசரென்கா கால் இறுதிக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 3-ம் நிலை வீராங்கனையும், 2006-ம் ஆண்டு சாம்பியனுமான மரியா ஷரபோவா (ரஷ்யா) 4-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.

இதில் ஷரபோவா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஷரபோவா கால் இறுதியில் 11-ம் நிலை வீராங்கனை மரியா பர்ட்டோலியை எதிர்கொள்கிறார்.

பிரான்சை சேர்ந்த பர்ட்டோலி 4-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான பெட்ரா குவிட்டோவை (செக்குடியரசு) 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

உலகின் முதல் நிலை வீராங்கனையான விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்) 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜார்ஜியாவை சேர்ந்த டாடிஸ் விலியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு சாம்பியனும் 7-ம் நிலை வீராங்கனையும், சமந்தா ஸ்டோசுர் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ரோப்சனை (இங்கிலாந்து) தோற்கடித்தார். கால்இறுதியில் அசரென்கா- சமந்தா மோதுகிறார்கள்.

நடப்பு சாம்பியனும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஜூலியனை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் 4-ம் நிலை வீரரான டேவிட் பெரர் (ஸ்பெயின்), ரோட்டிக் (அமெரிக்கா) வாவர்னிகா (சுவிட்சர்லாந்து) டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.