ஒபாமாவுக்கு தேர்தல் நிதியாக 5000 கோடி வசூல்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு கட்சிநிதி குவியத் தொடங்கியுள்ளது. அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த மாதம் அதிக பட்சமாக 181 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததுள்ளது. இதுவரை 947 மில்லியன் அமெரிக்க டாலர் அக்கட்சிக்கு வசூலாகியுள்ளது.

தேர்தல் நிதியாக ஒரு பில்லியன் டாலருக்கு (5000 கோடி) மேல் வசூல் செய்ய உள்ளது இதுவே முதல் முறையாக இருக்கும். சமீபத்தில் தனது ட்விட்டர் இணையதள செய்தியில் தனக்கு 2 கோடிக்கு மேல் ரசிகர்கள் இருப்பதாக அதிபர் ஒபாமா கூறியிருந்தார்.

எதிர் கட்சியான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மிட் ரோம்னி தேர்தல் பிரச்சாரம், இது பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. ஆனால் நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு பிறகு, இரண்டு நாட்களுக்குள் 12 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் கிடைத்ததாக அக்கட்சிக்கு கூறியுள்ளது.