டாக்டர் எம்: தேர்தலில் தாமதம் எதிர்தரப்புக்குச் சாதகம்

தேர்தலைத் தாமதப்படுத்திக்கொண்டே செல்வது மாற்றரசுக் கட்சிக்கு நன்மையாக அமையும் ஏனென்றால் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அது தேர்தலுக்கு நல்லபடியாக தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் காத்திருந்து தேர்தலை நடத்த முடியும், “ஆனால், அவர் காத்திருக்க, காத்திருக்க மற்றவர்களும் தேர்தலைச் சந்திக்க தயாராகி விடுவார்கள்” என்றவர் கூறியதாக இன்றைய நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஆண்டு இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறம். ஆண்டின் இறுதியில் வைத்தாலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வைத்தாலும்… எல்லா நேரமுமே நல்ல நேரம்தான்”, என்றாரவர்.

சாபா அம்னோவுக்கு வழங்கப்பட்ட ரிம40மில்லியன் ‘நன்கொடை’ பற்றியும் மகாதிர் கருத்துரைத்தார்.

“என் காலத்தில், மக்கள் கட்சிகளுக்கு நிறைய நன்கொடை அளித்திருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல மாற்றரசுக் கட்சிகளுக்கும்தான்”, என்றார்.

 

 

TAGS: