தேர்தல் சீர்திருத்தம் பற்றி விவாதிக்க குழு அமைக்கப்படும், நஜிப்

அடுத்தப் பொதுத்தேர்தலுக்கு முன்பு தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற குழுவை அமைக்கும் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார்.

“சமீபத்தில் தூய்மையான மற்றும் சுயேட்சையான தேர்தல்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கான அரசாங்கத்தின் பதில் அது விரைவில் ஒரு நாடாளுமன்ற குழு அமைப்பதற்கான முன்மொழிதலைச் செய்யும். அக்குழு பிஎன்  மற்றும் எதிரணி உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்”, என்றாரவர்.

கோலாலம்பூர், தேசிய செய்தி ஏஜென்சி (பெர்னாமா) தலைமையகத்தில் நோன்பு துறக்கும் நிகழ்வில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அக்குழுவின் நோக்கம் தேர்தல் சீர்திருத்தங்கள் மீது இரு தரப்பினரின் ஒப்புதலைப் பெறுவதும் அரசாங்கம் மீதான சந்தேகத்தைத் தவிர்ப்பதுமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

-பெர்னாமா