உங்கள் கருத்து: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிப்பு முறையை திருத்துங்கள்

“எத்தகையச் சீர்திருத்தமும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏதாவது அர்த்தம் இருக்கும். எந்தச் சீர்திருத்தத்திற்கும் முன்னதாக பொதுத் தேர்தல் நிகழ்ந்தால் எந்தப் பொருளும் இல்லை.”

 

  

 

நஜிப்: தேர்தல் சீர்திருத்தம் பற்றி விவாதிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும்

டேவிட் தாஸ்: 1969ம் ஆண்டுக்குப் பின்னர் ஜனநாயக ஆட்சி முறையை மீண்டும் நிலை நிறுத்த  தமது தந்தையார் கொண்டிருந்த உறுதிப்பாடு குறித்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தாம் வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பேசியிருக்கிறார்.

மக்கள் உண்மையாகத் தேர்வு செய்த அரசாங்கமாக இருந்தால் மட்டுமே தமது நிர்வாகம் அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பெரிய முன்னேற்றமாகும். தேர்தல் ஆணையத்துக்கு இருந்த பெரிய இடர்பாடு அகன்றுள்ளது. 

அடையாளம் இல்லாதவன்_3f55: முதலாவதாக, நமது தேர்தல்கள் நியாயமானவை. சுதந்திரமானவை என அரசாங்கம் ஏற்கனவே கூறியது எல்லாம் மாயையா?

இரண்டாவதாக, பெர்சே போராடி வருகிற விஷயங்கள் அனைத்தும் உண்மை என்பது அதன் பொருளா?

மூன்றாவதாக, தேர்தல் ஆணையம் முன்பு கூறிய பதில்கள் அனைத்தும் பொய்யானவையா?

நான்காவதாக, பெர்சே 2.0ஐ சட்ட விரோதமானது என்று பிரதமரது உறவினரான ஹிஷாமுடின் ஹுசேன் அறிவித்தது தவறா? (அது சரி என்றால் அவரை நீக்குங்கள்)

கடைசியாக ஒரு வேண்டுகோள், எஸ் அம்பிகாவை தேர்தல் ஆணையத் தலைவராக நியமிக்கவும். அப்போது உங்களுக்கு இரு தரப்புக்களின் ஆதரவும் கிடைக்கும். மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆனால் ஒன்று துப்புரவு செய்யப்பட்ட பின்னரே தேர்தல் என நீங்கள் வாக்குறுதி தர வேண்டும். பிரதமர் அவர்களே, நீங்கள் எனக்கு உதவுங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்.

பல இனம்: அந்த உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் அரசாங்கத்துக்கும் எதிர்த்தரப்புக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். பெர்சே, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூத்த பேராளர்களும் அதில் இருக்க வேண்டும். வழக்குரைஞர் மன்றம், மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு, மனித உரிமை ஆணையம் ஆகியவை பார்வையாளர்களாக சம்பந்தப்படலாம்.

பெர்சே இதுகாறும் செய்தது எல்லாம் சரி என்பது இப்போது மெய்பிக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அங்கீகரியுங்கள்.

நீலகிரி: எதிர்த்தரப்பு உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட குழுவைப் பிரதமர்  அமைத்தால் மட்டுமே நாங்கள் அவரை நம்புவோம். இல்லையென்றால் நேரமும் பணமும் விரயமே. அவர் எந்த அளவுக்கு உண்மையானவராக இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அந்தக் குழுவுக்கு எதிர்த்தரப்பு உறுப்பினர் தலைமை தாங்க வேண்டும் என லிம் கிட் சியாங் வலியுறுத்துவது முற்றிலும் நியாயமானதாகும். அவ்வாறு செய்யாவிட்டால்.. அது இன்னொரு கண் துடைப்பாகவே இருக்கும்.

கேகன்: அந்த இரு தரப்புக் குழுவில் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். பிஎன்னுக்கு 7, பக்காத்தான் ராக்யாட்டுக்கு 3 எனவோ அல்லது அது போன்றோ இருக்கக் கூடாது. அத்துடன் தான் கூறும் யோசனைகளை தேர்தல் ஆணையம் அமலக்குவதைக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் அந்தக் குழுவுக்கு இருக்க வேண்டும். வெறும் ஆலோசனைக் குழுவாக அல்ல.

தேர்தல் ஆணையத்துக்கு வெள்ளை அடிப்பதற்காக மட்டும் அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்தால் பக்காத்தான் உறுப்பினர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியேறி விட வேண்டும்.

ஏபி சுலைமான்: மேலோட்டமாகப் பார்த்தால் அது நல்ல மாற்றமாகத் தெரிகிறது. நஜிப்பும் கடைசியாக வெளிச்சத்தைக் காணத் தொடங்கி விட்டதாகத் தோன்றுகிறது

என்றாலும் எத்தகைய சீர்திருத்தமும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் ஏதாவது அர்த்தம் இருக்கும். எந்த சீர்திருத்தத்திற்கும் முன்னதாக பொதுத் தேர்தல் நிகழ்ந்தால் எந்தப் பொருளும் இல்லை. விழலுக்கு இறைத்த நீராகி விடும்.

நஜிப் அவர்களே, நீங்கள் உண்மையானவர் என்பதைக் காட்டுங்கள். சீர்திருத்தங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல் செய்யுங்கள்.