முன்னாள் பிரதமர் தாம் உருவாக்கிய பேய்களை ஒட்ட முயலுகிறார்

mahathir‘உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது சீனர்களுடைய இக்கட்டான சூழ்நிலை அல்ல. மகாதீருடைய பயங்கரக் கனவாகும். சீனர்களை சாடுவதின் மூலம் தாம் உருவாக்கிய பேய்களை ஓட்ட அவர் முனைகிறார்’

மகாதீர்: சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனரா அல்லது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனரா ?

துணிச்சலான மலேசியன்: அந்த போலி மலாய்க்காரர், மலாய்க்காரர்களிடமிருந்து சுய மரியாதை உட்பட எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டார். அவர் அரசர் வம்சங்களுக்கு எதிராக சதி செய்தார். தமது குடும்பத்தையும் சேவகர்களையும் கள்ளத்தனமாகப் பணக்காரர்களாக உயர்த்தினார்.

வாக்குகளுக்காக குடியுரிமையைக் கொடுத்ததின் மூலம் அவர் கடுமையான தேசத் துரோகத்தைச் செய்துள்ளார். அதனால் பொதுவாக நாட்டின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டது. குறிப்பாக மலாய்க்காரர்களுடைய நலன்கள் பாதிக்கப்பட்டு விட்டது.

கிராமப்புற மலாய்க்காரர்கள் வறுமையில் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அப்படி இருந்தால் தான் அவரும் அம்னோவும் தனது சொந்த நோக்கங்களுக்கு கிராமப்புற மலாய்க்காரர்களை ஏமாற்ற முடியும். கிராமப்புற மலாய்க்காரர்களை அச்சுறுத்துவதற்கு அவர் சீனர்களைப் பூச்சாண்டியை சௌகரியம் போல் பயன்படுத்துகிறார்.

சீனர்கள் அரசியல் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிக்கவில்லை என நான் மலாய்க்காரர்களுக்கு உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அரசாங்கத்தின் ஊழல், திறமையின்மை, இனவாதம் ஆகியவற்றால் வெறுப்படைந்ததால் சீனர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்தனர்.

இந்த நாட்டை அரசாங்கம் சீர்படுத்த முடியாத அளவுக்கு நாசப்படுத்தி விடும் என்பது நமக்குத் தெரியும். மலேசியாவுக்குப் பிரதமராக முடியும் என எந்த சீனனும் கொஞ்சம் கூட எண்ணவில்லை. காரணம் நாங்கள் உண்மை நிலையை அறிந்தவர்கள். உண்மையில் நாங்கள் அன்வார் இப்ராஹிம் பிரதமராக வேண்டும் என நாங்கள் விரும்பினோம்.

சட்டமுட்டாள்: டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, நான் உங்களுக்குப் பதில் சொல்கிறேன். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்கள் விரும்பவே இல்லை. முழுக்க முழுக்க மலேசிய மலாய்க்காரர்களினால் நிர்வாகம் செய்யப்பட்டாலும் நியாயமான, நீதியான மலேசிய அரசாங்கத்தையே அவர்கள் நாடுகின்றனர்.

Ex-wfw: அம்னோ தகுதி வழங்கும் மலாய்க்காரர்களுடன் மட்டுமே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மகாதீர் சொல்ல வருகிறாரா ?

அன்வார் இப்ராஹிம், அப்துல் ஹாடி அவாங், ராபிஸி இஸ்மாயில், காலித் சாமாட், முகமட் சாபு, நுருல் இஸ்ஸா ஆகியோர் மகாதீர் கொடுக்கும் விளக்கத்தின் படி மலாய்க்காரர்கள் இல்லையா ?

சக மலேசியன்: அம்னோ என்ற மலாய்க்காரர்கள், மசீச என்றால் சீனர்கள் என மகாதீர் நமக்குச் சொல்கிறாரா ? ஆகவே சீனர்கள் மசீச-வைக் கை விட்டதால் மலாய்க்காரர்களும் சீனர்களும் அரசியல், பொருளாதார அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது முடியாத காரியமாகி விட்டது என்பது அவரது எண்ணமாகும்.

அம்னோ/பிஎன் -னுக்கு சீனர் வாக்குகள் தேவை என்றால் சீனர்களை மீண்டும் ஈர்ப்பதற்கு முயற்சிகளை எடுத்து நாட்டு நிர்மாணத்துக்கு மகாதீர் உதவ வேண்டும். இனங்களுக்கு இடையில் அச்சத்தையும் வெறுப்பையும் பகைமையையும் அவர் தோற்றுவிக்கக் கூடாது.

ஈப்போகிரைட்: அது தான் மகாதீருடைய பழைய சிந்தனை. அம்னோ கோமாளிகளுக்கு கிறுக்குத்தனமான வழிமுறைகளை வழங்குவதே அதுவாகும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது சீனர்களுடைய இக்கட்டான சூழ்நிலை அல்ல. மகாதீருடைய பயங்கரக் கனவாகும். சீனர்களை சாடுவதின் மூலம் தாம் உருவாக்கிய பேய்களை ஓட்ட அவர் முனைகிறார்.

கலா: பக்காத்தான் கூட்டணி போட்டியிட்ட மொத்த இடங்களில் 33 விழுக்காட்டில் மட்டுமே டிஏபி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் வேளையில் அது பேராசைப்படுவதாக எப்படிச் சொல்ல முடியும் ?

கேஎஸ்என்: பொருளாதாரத்தில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக மகாதீர் சொல்வது அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதையே உணர்த்துகின்றது.

அரசாங்கச் சேவை முழுவதும் மலாய்க்காரர்கள், எல்லா வங்கிக் குழுமங்களும் மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில், பெட்ரோனாஸ் முதல் எல்லா பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும் மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானவை.

சைம் டார்பி, கத்ரி, பெல்டா போன்ற பெரிய தோட்ட நிறுவனங்கள் மலாய்க்காரர்கள் வசம் உள்ளன.

உண்மையாகச் சொன்னால் அனைத்து பொருளாதார, அரசியல் துறைகளும் மலாய்க்காரர்களுடைய கட்டுக்குள் உள்ளன.

ஒர் இனம் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறது என அவர் சொல்வது உண்மையில் மலாய்க்காரர்களுக்கே பொருந்தும். சீனர்களுக்கு அல்ல.

சுல்கெப்லி அகமட்: மகாதீர் முதுமை காரணமாக தளர்ச்சி அடைந்து விட்டார். அரசியல் அதிகாரத்தைச் சீனர்கள் கைப்பற்றுவர் என்னும்  பிரச்னையே இல்லை.

மலாய்க்காரர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள் என அவர்களை அச்சுறுத்துவதற்காக அம்னோவும் பெர்க்காசாவும் வகுத்துள்ள தந்திரமே அது. அம்னோவுக்கும் பிஎன் -னுக்கும் இந்த நாட்டை நல்ல முறையில் நிர்வாகம் செய்யத் தெரியாததால் சீனர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

.

TAGS: