‘உண்மையான சமய இழிவுகளா அல்லது அரசியல் கருவியா’ ?

say“அண்மைய விவகாரம் முட்டாள் ஜோடியான அல்விவியின் ஆபத்தான வழியை  காப்பியடித்து குறிப்பிட்ட ஒரு சமூகம் மீது பழி போடும் முயற்சியே அது என்பது  தெளிவாகும்”

போலீசார் இன்னொரு முகநூல் ‘சமய இழிவை’ புலனாய்வு செய்கின்றனர்

பாவி: அத்தகைய சம்பவங்கள் ( ஸ்துலாங் சட்ட மன்ற உறுப்பினர் அண்ட்ரூ சென்  -னின் உதவியாளருடைய முகநூலில் சேர்க்கப்பட்டுள்ள இழிவு) சதிகாரர்கள்  வேலை என்பது நிச்சயம். மசீச தலைவர் சுவா சொய் லெக் சொல்வது போல  ‘இளைய தலைமுறையினர் இன, சமய உணர்வுகளை தெளிவாகப் புரிந்து  கொள்ளவில்லை’ என்பதை அது நிரூபிக்கவில்லை. திருமண பந்தத்தில்  பற்றுணர்வை மலேசியக் கணவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை  அவருடைய சொந்த ஹோட்டல் நிகழ்வுகள் நிரூபிக்காததைப் போலத் தான்
அதுவும்.

அடையாளம் இல்லாதவன்#708871335: இது போன்ற பல இழிவுகள்
விசாரிக்கப்படவும் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை. ஆனால்  அதன் மீது கூடின பட்சம் ஆத்திரத்தை மூட்டுவதற்கு முயற்சிகள் செய்யப்படுவது  மட்டும் உண்மை. நாம் விரைவில் நிறையப் போலீஸ் புகார்களைக் காணப்  போகிறோம். பல அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கப் போகின்றன. பெருமக்கள்  ஆத்திரத்துடன் பேசும் பல பேட்டிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்  போகின்றன. பத்திரிக்கைகள் வெளியிடப் போகின்றன. ஆனால் குற்றவாளி
பிடிக்கப்பட மாட்டார்.

ஏன் ? சில தரப்புக்களுடைய நன்மைக்காக இனங்களுக்கு இடையில் பிளவை  ஏற்படுத்த சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே அவை என்பதே என் எண்ணம்.

இனங்களுக்கு இடையில் பகைமை உணர்வு ஏற்படுவதற்கு தூண்டி விடும் போது  எந்தத் தரப்புக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என்ற கோணத்தில் போலீசார்  விசாரிக்க வேண்டும் என முன்னாள் அலிரான் தலைவர் சந்திரா முஸாபார், நியூ  ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில்  கொள்ள வேண்டும்.

செக்ஸ் வலைப்பதிவாளர்களான அல்விவி சம்பவம் வேண்டுமானால் உண்மையாக  இழிவுபடுத்தும் விஷயமாக இருக்கலாம். மற்ற நேரங்களில் நாட்டில் குழப்பத்தை  விளைவிக்க வேண்டுமென்றே ஆத்திரத்தைத் தூண்டி விடும் மக்களும் இருக்கலாம்.

என்ன நடக்கிறது ?: நாட்டின் அமைதியையும் இணக்கத்தையும் சீர்குலைக்க இது  போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதால் துணப் பிரதமர் முஹைடின் யாசின்  ஒரு வேளை வெட்கப்படக் கூடும். ஆனால் அது அம்னோவுக்கும் பொருந்தும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் எல்லா அம்சங்களும் மோசமடைந்து வருகின்றன. மக்கள்  எல்லா வகையான நாடகங்களையும் அட்டூழியங்களையும் சகித்துக் கொள்ள  வேண்டியுள்ளது.

அண்மைய விவகாரம் முட்டாள் ஜோடியான அல்விவியின் ஆபத்தான வழியை  காப்பியடித்து குறிப்பிட்ட ஒரு சமூகம் மீது பழி போடும் முயற்சியே அது என்பது  தெளிவாகும்.

அண்மைய நிகழ்வால் நன்மையடையப் போவது யார் என்பது தெரிந்த
விஷயமாகும். அதற்கு யார் பொறுப்பு என முட்டாள்களுக்கு மட்டுமே தெரியாது.

நோன்பு மாதத்தில் அது போன்ற அழுக்கான காரியங்களில் அவர்கள் ஈடுபடுவதை  மன்னிக்கவே முடியாது. ஆனால் அவர்கள் கண்டு பிடிக்கப்பட மாட்டார்கள்.  அதற்குப் பதில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படுவர்.  இறைவன் நம்மை இரட்சிக்கட்டும்.

ஆர்1: நாய் பயிற்றுநர் சம்பந்தப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்து விட்ட  பின்னர் நமது அரசியல்வாதிகள் இன்னும் ஆதாரமற்ற ஒரு தாக்குதல் மீது  கண்டனக் கனைகளை வீசிக் கொண்டிருக்கின்றனர்.

 

TAGS: