‘ஆர்ஒஎஸ் ஏன் அம்னோவுக்கும் அதே விதிகளை அமலாக்கவில்லை ?’

DAp“அம்னோ சட்ட விரோத அமைப்பு என நீதிபதி ஹருண் ஹஷிம் தீர்ப்பளிப்பதற்கு  வழி வகுத்த அம்னோ 1987/88 தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா ?”

மத்திய நிர்வாகக் குழு தேர்தலுக்கு டிஏபி இணங்குகிறது

புரோராட்: தேர்தல் என வரும் போது டிஏபி வெண்மையிலும் வெண்மையாக  தோற்றமளிக்க வேண்டும்.

தவறான வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதற்கு வழி வகுத்த  ‘தொழில்நுட்பக் கோளாறும்’ ‘திருத்தத்திற்கு’ பின்னர் மலாய்க்காரரான புக்கிட்  பெண்டேரா எம்பி ஜைரில் கிர் ஜொஹாரி தேர்வானதாக அறிவிக்கப்பட்டதும்  டிஏபி எதிர்ப்பாளர்கள் அல்லது டிஏபி-க்குள் அரசியல் எதிரிகள் சதி  செய்துள்ளனரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தேர்தல் நடைமுறையில் ஏற்பட்ட கோளாறை டிஏபி சரி செய்வது முக்கியமாகும்.  அதற்கு ஒரே வழி மறு தேர்தலாகும். தனது சொந்தத் தேர்தலில் குளறுபடி  நிகழ்ந்துள்ள போது அது தேர்தல் மோசடி என பிஎன் மீது எப்படிக் குற்றம்  சாட்ட முடியும்.

மறு தேர்தலை நடத்தும் முடிவு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்றாலும்  அது சரியான முடிவு தான்.

மலேசிய இனம்: மறு தேர்தலுக்கு டிஏபி இணங்கியிருப்பது ஆர்ஒஎஸ் என்ற  சங்கப் பதிவதிகாரி, அதிகார வர்க்கம் ஆகிய தரப்புக்களுக்கு எதிராக துணிச்சலாக  அது எழுந்து நிற்பதைக் காட்டியுள்ளது.

ஏசிஆர்: அம்னோ சட்ட விரோத அமைப்பு என நீதிபதி ஹருண் ஹஷிம்
தீர்ப்பளிப்பதற்கு வழி வகுத்த அம்னோ 1987/88 தேர்தல் உங்களுக்கு
நினைவிருக்கிறதா ? அதனால் அம்னோ பாரு உதயமானது.

இப்போது ஜனநாயகம் பற்றிப் பேசும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்  அப்போது அரசியல் கட்சி உறுப்பினர்கள் கட்சித் தகராற்றை நீதிமன்றங்களுக்குக்  கொண்டு செல்வதைத் தடுக்கும் சட்டத்தை கொண்டு வந்தார்.

அதனால் தேர்தல்கள் எவ்வளவு மோசடியாக இருந்தாலும் நாம் அதனை ஏற்றுக்  கொள்ள வேண்டும். அம்னோவில் நிகழ்ந்துள்ள மோசடி அளவுக்கு மற்ற எந்த ஒர்  அமைப்பிலும் ஏற்பட்டது இல்லை.

அடையாளம் இல்லாதவன்_4031: டிஏபி கட்சித் தேர்தல்கள் தொடர்பான தேக்க  நிலையைப் போக்குவதற்கு புதிய தேர்தல்கள் தான் சிறந்த வழி. அது  வருத்தத்தைத் தந்தாலும் தவிர்க்க முடியாத விஷயமாகும்.

கட்சித் தேர்தலுக்கு 11 சட்ட விரோத தொகுதிகள் கட்சித் தேர்தல் நிகழ்ந்த
அம்னோ பொதுப் பேரவைக்கு பேராளர்களை அனுப்பியதால் அந்தக் கட்சி சட்ட  விரோதமானது என முன்பு தீர்ப்பளிக்கப்பட்ட போது புதிய தேர்தல்கள்  நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்படவில்லை. நீதிபதி ஹருண் அம்னோவை  சட்ட விரோத அமைப்பு எனப் பிரகடனம் செய்தார். ஆனால் அந்த சட்ட  விரோதக் கட்சி பிரதமர் பதவியைத் தொடர்ந்து வைத்திருக்க ஆர்ஒஎஸ்  அனுமதித்தது.

ஏன் இந்த இரட்டைத் தரம் ? ஆர்ஒஎஸ் இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.  அம்னோ தேர்தலில் 43 வாக்குகள் வித்தியாசத்தில் மகாதீர் வெற்றியாளர் என  அறிவிக்கப்பட்டார். அம்னோ பாரு என்னும் புதிய கட்சி, திடீர் மீ கொதிக்கும்  நேரத்தைக் காட்டிலும் விரைவாக பதிவு செய்யப்பட்டது.

உலகில் மிகவும் வேகமான பதிவு அதுவாகத் தான் இருக்க முடியும்.
ஆர்ஒஎஸ்-ஸின் அதி பயங்கர வேகத்திற்காக அது கின்னஸ் உலகச் சாதனைப்  புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

டிஏபி தேர்தல்களை நிராகரிப்பதற்கு ஆர்ஒஎஸ் நியாயமான காரணங்களை  கொடுக்கவில்லை என்றால் மக்கள் அதன் நேர்மை பற்றிக் கேள்வி எழுப்ப  வேண்டும். ஆர்ஒஎஸ் அப்போது ஏன் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என  அம்னோவுக்கு உத்தரவிடவில்லை ?

முகமூடி: அம்னோ தேர்தலுக்குப் பின்னர் கற்பனையான குளறுபடிகள் பற்றி  யாராவது ஒருவர் ‘தந்தை அகஸ்டின் சென்’ செய்ததைப் போல ஆர்ஒஎஸ்-ஸுக்கு  கடிதம் எழுத வேண்டும். அதே சட்டத்தைப் பின்பற்றி அதே உத்தரவை  பிறப்பிக்கின்றதா என நாம் பார்க்க வேண்டும்.

 

TAGS: