குவான் எங் அவர்களே, மக்கள் முடிவு செய்ய விடுங்கள்

tanda“மலேசியாவில் ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தடை விதித்த மத்திய  அரசாங்கத்தைப் போன்று குவான் எங்-கும் செயல்படுகிறார்”

தண்டா புத்ராவை திரையிட வேண்டாம் என பினாங்கு சினிமா அரங்குகளை  கேட்டுக் கொள்கின்றது

பினாங்குக்காரன்: இந்த முறை நான் முதலமைச்சர் லிம் குவான் எங் பக்கம்  இல்லை. ‘தண்டா புத்ராவை’ மக்கள் பார்க்க விடுங்கள். அது பற்றி அவர்களே  முடிவு செய்யட்டும்.

நான் பினாங்கு அரசாங்கம் பற்றி ஏமாற்றம் அடைந்துள்ளேன். பிஎன் பாடும்  பல்லவியை அதுவும் ஏன் இசைக்க வேண்டும் ? பினாங்கை வளப்படுத்துவதில்  கவனம் செலுத்துங்கள். இதில் ஏன் நேரத்தை விரயம் செய்கின்றீர்கள் ? நீங்கள்  பிஎன் -னிடமிருந்து மாறுபட்டவர்கள் என்பதைக் காட்டுங்கள்.

அர்ச்சன்: சினிமா அரங்குகள் அதனைத் திரையிட பினாங்கு அனுமதிக்க
வேண்டும். உணர்வுகளைத் தூண்டும் வகையில் அதன் கற்பனை மித மிஞ்சிப்  போயிருப்பதை விளக்கும் பிரசுரங்களை எல்லா மொழிகளிலும் வெளியிடுங்கள்.

வாங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் அதனைச் சேர்த்துக் கொண்டு விநியோகம்  செய்யுங்கள்.

ஜென் யென் அர்ச்சன்: பிரசுரங்களை வெளியிடுவது சரியான அணுகுமுறையாகும்.  அதனைத் ‘தடை’ செய்யவும் வேண்டாம். அதனைக் காட்ட வேண்டாம் என  சினிமா அரங்குகளுக்கு ‘வேண்டுகோள்’ விடுக்கவும் வேண்டாம்.

‘கற்பனை’ உரிமை என்ற போர்வையில் அவதூறான  பொய்களைக் கண்டு பினாங்கு அரசாங்கம் அஞ்சப் போவதில்லை எனக் காட்டுங்கள்.

ராட்பாட்பூளு: மலேசியாவில் ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தடை  விதித்த மத்திய அரசாங்கத்தைப் போன்று குவான் எங்-கும் செயல்படுகிறார்.  மக்கள் எதைப் பார்க்க வேண்டும் எதைப் பார்க்கக் கூடாது என்பதை முடிவு  செய்வதைப் போல.

மைஹோப்: அந்தத் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ள சிறுநீர் கழிக்கும்
காட்சியைக் குறை கூறுவதை விடுத்து உண்மையான கதையைச் சொல்ல  பக்காத்தான் ராக்யாட் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் குறிக்கோளை இழந்து விட்டது.  போராட்ட உணர்வும் மங்கி விட்டது. அண்மைய காலமாக அதன் எதிரிகள் பல  விஷயங்களில் தில்லுமுல்லு செய்கின்றனர்.

என் உரிமைகள்: அந்தத் திரைப்படத்தை தடை செய்வதையோ திரையிட  வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதையோ நான் ஒப்புக் கொள்ளவில்லை.

அம்னோவைக் காட்டிலும் தான் சிறந்தது என்பதை பினாங்கு அரசாங்கம் காட்ட  இதுவே தருணம்.

ஸ்பாஞ்ச் பாப்: அம்னோ தலைவர்களுடைய ஒப்புதலுடன் ‘தலைவர் வீட்டில்  சிறுநீர் கழிக்கும்’ புதிய பண்பாடு இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் அரசியல் தலைவர் மீது வெறுப்பு ஏற்பட்டால் அந்தப் பண்பாட்டை  பின்பற்ற உங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நமக்கு பொது  கழிப்பறைகள் தேவை இல்லை. பொது மக்கள் சிறுநீர் கழிப்பதற்கு அரசியல்  தலைவர்களுடைய வீடுகள் திறந்திருக்கின்றன.

அடையாளம் இல்லாதவன்_40a7: அந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளில்  புரோட்டோன் ஈஸ்வரா கார்கள், டைஹாட்சு லோரிகள், சிசிடிவி கேமிராக்கள்  இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவை 1969ல் அறவே இல்லை.

ஏதோ ஒரு விளையாட்டு போல ஒருவரை ஒருவர் ‘புன்னகையுடன்’ தாக்கிக்  கொள்வதையும் நீங்கள் காணலாம்.

ஆகவே நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்க முடிவு செய்தால் விழுந்து விழுந்து  சிரிக்க வாய்ப்புக் கிடைக்கும். நிச்சயம் அது ‘கற்பனை’ தான்.

ஸ்பின்னாட்: வரலாற்றுத் திரைப்படம் என அழைக்கப்படும் ஒன்றில் இன  வெறுப்பைத் தூண்டி விட கற்பனை நிகழ்வு சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே மலேசியா  வாழ்க.

 

TAGS: