பெற்றோர் இல்லாமல் பிள்ளைகளை போலீசார் விசாரித்தது தவறு

1 sk“போலீஸ் அதிகாரிகள் பிள்ளைகளை ‘பேட்டி’ கண்டனர். அவர்களிடமிருந்து  அதிகாரத்துவ வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. என்றாலும் மாணவர்களை  அச்சுறுத்தவில்லை என அவர்கள் கூறிக் கொள்கின்றனர். அதனை நம்ப முடிகிறதா  ?”

ஒசிபிடி: ஆமாம் நாங்கள் பிள்ளைகளை விசாரித்தோம். ஆனால் மிரட்டவில்லை

அப்சலோம்: போலீசார் மாணவர்களிடம் ‘பேசுவதற்கு’ முன்னர் தலைமை  ஆசிரியரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அந்தத் தலைமை ஆசிரியர்  உடனடியாக பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்து பெற்றோர் அல்லது  பாதுகாவலர் வரும் வரையில் காத்திருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் போலீசார் செய்த தவறு பெரிதல்ல. அவர்கள்  தங்கள் வேலையைச் செய்கின்றனர். சில சமயங்களில் ஈவிரக்கமில்லாமலும்  செய்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் நம்பிக்கை வைத்து தங்கள் பிள்ளைகளை  ஒப்படைத்துள்ள தலைமை ஆசிரியர் அதற்காக வெட்கப்பட வேண்டும்.

குளியலறையில் பிள்ளைகளை சாப்பிட வைத்தது முதல் சம்பவம். இது  இரண்டாவது. பள்ளிக்கூடம் ஒன்றில் வேலை செய்வதற்கே அவர் தகுதியற்றவர்.

பெர்ட் தான்: சுங்கை பூலோ போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங், திறமையாக  பொய் சொல்வதற்கு நல்ல நினைவாற்றல் வேண்டும். பிள்ளைகளை விசாரிக்குமாறு  உங்கள் அதிகாரிகளை கேட்டுக் கொள்ளவில்லை என நீங்கள் நேற்று  சொன்னீர்கள்.

மலேசியாகினி தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது ‘பிள்ளைகளுக்கு என்ன  தெரியப் போகிறது’ என்றும் தெரிவித்தீர்கள்.

ஆனால் இப்போது தாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகச்
சொல்கின்றீர்கள். நீங்கள் பொய் சொல்வதாக துணிச்சலான பல பெற்றோர்கள்  நிருபர்களிடம் தெரிவித்த பின்னர் நீங்கள் தலைகீழாக மாறியது ஏன் ?

சீருடை அணிந்திருந்த போலீஸ்காரர்கள் ஏழு வயது எட்டு வயது பிள்ளைகளை  விசாரிக்கவில்லை, பேசிக் கொண்டிருந்தனர் என நீங்கள் சொல்லவில்லை ?

என்ன நடக்கிறது: அம்னோ கட்டுக்குள் உள்ள அரச மலேசியப் போலீஸ் படை  அல்லது மற்ற அரசாங்க அமைப்புக்களின் கருத்துக்களை வாசிக்கும் போது என்  ரத்தம் கொதிக்கிறது.

போலீஸ் அதிகாரிகள் பிள்ளைகளை ‘பேட்டி’ கண்டனர். அவர்களிடமிருந்து  அதிகாரத்துவ வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. என்றாலும் மாணவர்களை  அச்சுறுத்தவில்லை என அவர்கள் கூறிக் கொள்கின்றனர். அதனை நம்ப முடிகிறதா
?. நாம் இங்கு எத்தகைய முட்டாளைப் பெற்றுள்ளோம் ?

இது உண்மையில் அப்பட்டமான மிரட்டும் நடவடிக்கை. பிள்ளைகளை
அச்சுறுத்துவது. அந்த போலீஸ் அதிகாரிகளைக் கண்டு அந்தப் பிள்ளைகள்  மருண்டு போயிருக்கின்றன. அந்த விவகாரம் மீது அவர்களுடைய வாயை மூடச்  செய்வதே அந்தப் பேட்டிகளின் நோக்கம்.

இயான்2003: ஒரு குழந்தையின் கண்களில் பேட்டிக்கும் விசாரணைக்கும்  வித்தியாசமில்லை.

அவர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரிப்பதே மிரட்டலுக்கு ஒப்பாகும்.  பெற்றோர்களுக்கு ஏன் தகவல் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி அதனால்  எழுந்துள்ளது. இப்போது பல பிள்ளைகள் மன அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடையாளம் இல்லாதவன்..66: தலைமை ஆசிரியர் தமது ஆணவத்தை ஒதுக்கி  விட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இது போன்று மீண்டும் நிகழாது என உறுதி  கூறியிருக்க வேண்டும். பெற்றோர்கள் அவரை நிச்சயம் மன்னித்திருப்பார்கள்.

ஆனால் சேதம் ஏற்பட்டு விட்டது. தலைமை ஆசிரியர் தமது தவறுகளை ஒப்புக்  கொள்ள மறுக்கிறார். தமது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர் தவறான  தலைமைத்துவத்தை காட்டுகிறார்.

ருஹாய்ஸான் முகமட் பிக்ரி: குழந்தைகளுடைய நலன்கள் கவனிக்கப்படாமல்  பள்ளி நலனும் அரசியல் எஜமானர்களுடைய நலனும் பாதுகாக்கப்படும்  முதலாவது நாடு இதுவாகும். மிகவும் அவமானமாக இருக்கிறது. அதனால் தான்  மலேசியர்களில் 51 விழுக்காட்டினர் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர்.

லிம் சொங் லியோங்: நேற்று அவர்கள் பிள்ளைகளை விசாரிக்கவில்லை. இன்று  அவர்கள் அதனைச் செய்தனர். ஆனால் விசாரணை செய்யவில்லை. நாளை  அவர்கள் விசாரிப்பர். ஆனால் கைது செய்ய மாட்டார்கள்.

மறு நாள் பிள்ளைகள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை வாக்குமூலம் பதிவு  செய்யப்படும். நான்காவது நாள் என்ன நடக்கும் ? சித்தரவதை அடுத்து  நுரையீரலில் தண்ணீர் காணப்படுமா ? அரச மலேசியப் போலீஸ் படை ஏன்  முதல் நாளிலிருந்து உண்மையைச் சொல்லக் கூடாது ?

 

TAGS: