`டிபிபியைச் சந்திக்க முடியவில்லை என்றால் உண்ணாவிரதம்`

மறைந்த டி நவீனின் குடும்பத்தினரும் நண்பர்களும், ஜூன் 22-ஆம் தேதிக்கு முன்னர் வழக்கைத் தொடரத் தவறினால் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர் என்று ஆர்வலர் அருண் துரைசாமி தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் எங்களைச் சந்திக்கத் தயாராகும் வரை, நவீனின் தாயார் சாந்தி துரைராஜ் மற்றும் அவரின் நண்பர் பிரவினுடன் நானும்…

இன்று 6,849 புதிய நேர்வுகள், அவற்றில் பாதி கிள்ளான் பள்ளத்தாக்கில்

கோவிட் 19 | கடந்த 24 மணி நேர இடைவெளியில், மேலும் 6,849 புதியக் கோவிட் -19 நேர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நான்கு நாட்களாகச் செயலில் உள்ள நேர்வுகளில் சரிவு தொடர்கின்றது, ஆனால் தீவிரச் சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிட் -19…

புதியப் பிரதமராக ஹிஷாமை ஆதரித்து கூட்டு அறிக்கை வெளியிடவில்லை –…

புதியப் பிரதம வேட்பாளராக, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனை ஆதரித்து, பாஸ்-உடன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகளைச் சபா வாரிசான் கட்சி இன்று மறுத்துள்ளது. வாரிசான் தலைமைச் செயலாளர் லோரெட்டோ படுவா ஜூனியர், இந்த அறிக்கை உண்மையல்ல என்று மறுத்ததோடு, அது குறித்து போலீஸ் புகார் செய்யவுள்ளதாகவும்…

லிம் : பி40, எம்40 கடன்தாரர்களுக்குத் தானியங்கி கடன் ஒத்திவைப்பு…

டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, மக்களுக்குக் கூடுதல் நிதி உதவி வழங்க ஒப்புக் கொண்டார் என்று கூறினார். இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்தானா நெகாராவில், சுல்தான் அப்துல்லாவைச் சந்தித்தபோது இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதாக லிம்…

`மக்களவையைக் கூட்ட வேண்டும், மாகேரன் தேவையில்லை` – அம்னோ வலியுறுத்து

நாட்டின் ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்றம் மீண்டும் கூட வேண்டும் என்ற தனது விருப்பத்தை, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுக்கு அம்னோ தெரிவித்தது. அதே நேரத்தில், அதன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, தேசியச் செயல்பாட்டு மன்றப் (மாகேரன்)…

`மாகேரன்` பரிந்துரையைப் பி.எச். நிராகரிக்கிறது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது முன்மொழிந்த 1969-ஆம் ஆண்டு போல, தேசிய செயல்பாட்டு மன்றம் (மாகேரன்) அமைக்கும் திட்டத்தைப் பி.எச். நிராகரித்தது. மறுபுறம், அவசரகால அமலாக்கத்தை நிறுத்தவும், நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவும் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் அழைப்பு விடுத்தது. "நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு கட்சியாக,…

“டாக்டர் எம் இன்னும் நாட்டை நிர்வகிக்க விரும்பினால், ஏன் இராஜினாமா…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட், இன்னும் நாட்டை நிர்வகிக்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது, பிறகு ஏன் அவர் முன்னர் இராஜினாமா செய்தாரென தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லி காங் கேள்வி எழுப்பினார். [caption id="attachment_191778" align="aligncenter" width="1000"] "துன் மகாதீர் இன்னும் நாட்டை ஆள…

சினி ஏரியில் சுரங்கம் தோண்டுவதை நிறுத்துக – சுற்றுச்சூழல் என்ஜிஓ…

மலேசியாவின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியான தாசிக் சினி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பஹாங் அரசாங்கத்தை மலேசிய இயற்கை தோழர்கள் (சஹாபாட் ஆலம் மலேசியா - எஸ்.ஏ.எம்.) எனும் சுற்றுச்சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வலியுறுத்தியது.…

இன்று 5,671 புதிய நேர்வுகள், 73 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,671 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும் இன்று, 73 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,684 பேர் பலியாகியுள்ளனர். இன்று 7,325 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 911…

அன்வர் என்னை அழைத்தார், ஆனால் அவரிடம் தீர்வு இல்லை –…

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமிடமிருந்து தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததை, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது உறுதிப்படுத்தினார். அந்த உரையாடலில், அவரும் பி.கே.ஆர். தலைவரும் நாட்டின் தற்போதைய நெருக்கடி பற்றி விவாதித்ததாக அவர் சொன்னார். இருப்பினும், பிரச்சினையைத் தீர்க்க அன்வாரால் எதையும் பரிந்துரைக்க முடியவில்லை என்று…

என்ஓசி நிர்வாகத்தை அமைக்க டாக்டர் எம் பரிந்துரை, சேவை செய்யவும்…

1969-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது போன்று, ஒரு தேசியச் செயல்பாட்டு மன்றத்தை (என்ஓசி) அரசாங்கம் அமைக்க வேண்டுமென்று, இன்று யாங் டி-பெர்த்துவான் அகோங்குடனான தனது சந்திப்பின் போது டாக்டர் மகாதிர் மொஹமட் முன்மொழிந்துள்ளார். இருப்பினும், இந்தத் திட்டம் நிறைவேறுமா என்பதில் முன்னாள் பிரதமர் சந்தேகம் கொண்டுள்ளார். "அகோங் அதை நிராகரிக்கவில்லை,…

சுகாதார அமைச்சு : ஆபத்தான மாறுபாடுகளின் 23 நேர்வுகள் கண்டறியப்பட்டன

நாட்டில், ஜூன் 3 முதல் 8 வரையில், தொடர்ச்சியான மரபணு கண்காணிப்பின் விளைவாக, 23 கோவிட் -19 வேரியண்ட் ஆஃப் கன்சர்ன் (விஓசி) கண்டறியப்பட்டன, அவற்றில் 18 நேர்வுகள் பீட்டா மாறுபாடுகள் (பி.1.351) மற்றும் நான்கு நேர்வுகள் டெல்டா வகைகள் (பி.1.617.2) ஆகும். சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர்…

புவாட் : ‘ஏன் திடீரென்று ‘மாகேரன்’ பற்றிய பேச்சு?’ –…

தேசியச் செயல்பாட்டு மன்றம் (மாகேரன்) அமைக்க வேண்டுமெனக் கூறிய தரப்பினரைக் கடிந்து பேசிய, பிரதமர் முஹைதீன் யாசினின் மூத்த அந்தரங்கச் செயலாளர் மர்சுகி முகமதுவை, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் புவாட் சர்காஷி விமர்சித்தார். "திடீரென்று மாகேரனைப் பற்றி பேசும் ஒரு வீடியோ வந்தது. மாகேரனை கொண்டுவர விரும்புபவர்களைக்…

சிகாமாட்டில் உள்ள என்.ஜி.ஓ.க்கள் சமூகத்திற்கு உதவுவதைத் தடுத்ததில்லை – சந்தாரா

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா குமார், சமூகத்திற்கு, குறிப்பாக சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில், சமூகத்திற்கு உதவும் அரசு சாரா நிறுவனங்களைத் (என்ஜிஓ) தடுப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார். "சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு, ஜூன் 6, 2021 தேதியிட்டு, எனது முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கை விடப்பட்டது, நாடாளுமன்ற…

2020 எஸ்பிஎம் : 5 ஆண்டுகளில் சிறந்த தேர்வு முடிவு

2020 மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) 4.80 என்ற சாதனை, ஐந்து ஆண்டுகளில் தேசியச் சராசரி தரத்துடன் (ஜி.பி.என்.) சிறந்தது என்று மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். 2019-இல் 4.86, 2018-இல் 4.89, 4.90 (2017) மற்றும் 5.05 (2016) ஆகவும் ஜி.பி.என். இருந்தது…

இன்று 6, 239 புதிய நேர்வுகள், 37 % சிலாங்கூரில்

கோவிட் 19 | கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மொத்தம் 6,239 கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், 2,291 நேர்வுகள் (37 விழுக்காடு) சிலாங்கூரில் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், இன்று 75 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம்…

அமெரிக்காவுக்கு AS$1.3 பில்லியனைச் செலுத்த, கோல்ட்மேனுக்கு 10 நாட்கள் அவகாசம்

1எம்டிபி ஊழல் தொடர்பில், கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம், அதன் AS$2.3 தீர்வு பங்கில் மீதமுள்ள AS$ 1.26 பில்லியனை அமெரிக்க அதிகாரிகளுக்குச் செலுத்த 10 நாட்கள் அவகாசம் உள்ளது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஜூன் 4-ம் தேதி அமெரிக்க அரசாங்கத்தால் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 10 நாள்…

பி.என். அரசாங்கம் தோல்வியுற்றது என்பது உண்மை இல்லை – அலெக்சாண்டர்

உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நாந்தா லிங்கி, தேசியக் கூட்டணி (பிஎன்) நிர்வாகத்தைத் "தோல்வியுற்ற அரசாங்கம்" என்ற எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஊடகப் பயனர்களின் தாக்குதல்களை நிராகரித்தார். "உதவிகள் பெறுவது கடினமாக உள்ளது என்று மக்கள் சொன்னால், இது உண்மையாக இருக்கலாம். இந்தப் பலவீனங்கள்,…

‘அனைத்து கருத்துகளையும் செவிமடுக்க, மாமன்னர் திறந்த மனதுடன் இருக்கிறார்’

இன்று காலை, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் அன்வர் இப்ராஹிம் இடையேயான சந்திப்பில், புதிய மலேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பிரச்சினைகள் ஏதும் பேசப்படவில்லை. இன்று காலை, 11.54 மணிக்கு இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறிய பின்னர் பி.கே.ஆர். தலைவர் இதை…

‘எஸ்.ஓ.பி.யை மீறும் யாருக்கும் விலக்கு இல்லை, என் மகனாக இருந்தாலும்’…

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி) கீழ், விதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், தனது சொந்த மகன் உட்பட யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று உறுதி அளித்தார். பிரபலங்களை ஜூரிகளாகக் கொண்ட, ஒரு பாடும் திறன் போட்டியில், கடாஃபி இஸ்மாயில் சப்ரி…

முகக்கவரி அணியவில்லை – தாஜுடினுக்கு RM1,500 தண்டம்

பிரசாரனா மலேசியா பெர்ஹாட்டின் முன்னாள் தலைவர், தாஜுடின் அப்துல் இரஹ்மான், கடந்த மாதம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது முகக்கவரி அணியாததற்காக RM1,500 தண்டம் விதிக்கப்பட்டது. தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் (தொற்றுநோய்களின் உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2021-ன் கீழ், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்தத்…

சீனக் கடலோரக் காவல் கப்பல்கள், மலேசியக் கடலுக்குள் நுழைந்தது

சீனா மற்றும் மலேசியாவின் உரிமைகோரலில் சிக்கியுள்ள, சரவாக், பெத்திங் பாத்திங்கி அலி அருகே, ஒரு சீனக் கடலோர காவல்படை கப்பல் காணப்பட்டது. அதே பகுதியில், 16 சீனப் போர்க்கப்பல்கள் பறந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடலோரக் காவல்படை கப்பல், ஜூன் 4-ம் தேதி, மிரி…

மூழ்கியப் படகுகள் : மசீச அனைவரையும் மூழ்கடித்துவிடும் – டிஏபி

பினாங்கு துறைமுக ஆணையத்தில் (எஸ்.பி.பி.பி), மசீச தலைவர்களின் தலைமைத்துவதைப் புலாவ் திக்குஸ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ் லீ சாடினார். பினாங்கு நகரில் கைவிடப்பட்ட படகுகளின் படங்கள், சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே வாய்மொழி யுத்தம் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில்…