கேபாட் : தோற்றது கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் அல்ல, காப்பார்…

உயர்நிலை சிந்தனை திறன்களை (கேபாட்) சிறப்பாக செயல்படுத்துவதில் தவறியது கல்வி அமைச்சுதான், எனவே, கவனிக்கப்பட வேண்டியது அவ்வமைச்சுதான். காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன், “உண்மையான பலவீனம், ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புமுறை மற்றும் கல்வி கொள்கையில் உள்ளது என்பதால், அரசாங்கம் ஆசிரியர்களைச் சுட்டிக்காட்ட வேண்டாம்,” என்றார். " ‘கேபாட்’ மதிப்பீடு…

60 % பள்ளிகள் ‘கேபாட்’ பிரச்சனையை எதிர்கொண்டதற்கு ஆசிரியர்களின் பலவீனமும்…

உயர் நிலை சிந்தனை திறன்களின் (கேபாட்) சிறந்த நடைமுறை மதிப்பீட்டு முடிவுகளில், 169 பள்ளிகள் ‘நல்ல’ மற்றும் ‘சிறந்த’ அடைவு நிலைகளுக்குக் கீழே இருப்பதற்கு, ஆசிரியர்களின் ‘ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிதல்’ ஆகியவையும் காரணங்களாகும். பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தர உத்தரவு அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்ட 282 ஆரம்ப ,…

நாடாளுமன்றத்தில் நஜிப் : காலை 10.04-க்கு வந்தவர், 10.12-க்குச் சென்றுவிட்டார்

2018 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த 13 நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் எட்டு நிமிடங்கள் மட்டும் உரையாற்றி சென்ற பிரதமர் நஜிப் ரசாக்கை, கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் சாடினார். "இன்று காலை 10.04-க்கு, கேள்விக்குப் பதில் அளித்த அவர், 10.12-க்கு மணிக்கு சென்றுவிட்டார்," என்று வோங்…

ரஃபிசி : 14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா, எரிபொருளுக்கு மானியம் …

பிரதமர் நஜிப் இரசாக், மக்களின் இதயங்களைக் கவர்ந்து, 14- வது பொதுத் தேர்தலில் வெல்வதற்கு ரஃபிசி ரம்லி சில குறிப்புகளைக் கொடுத்தார். டிசம்பர் 2017 தொடங்கி, ஜனவரி 2018 வரை எரிபொருளுக்கு RM0.20 சென் மானியம்  வழங்க வேண்டும் என்று அந்த பாண்டன் எம்.பி. கூறினார். "டிசம்பர் மற்றும்…

முன்னாள் தூதர், பாஸ் கட்சியிலிருந்து டிஏபிக்கு மாறினார்

முன்னாள் தூதர் இயொப் அட்லான் ச்சே ரோஸ், 74, பினாங்கில் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் டிஏபியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த 2004-ஆம் ஆண்டு, உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில், பாஸ் சார்பாக அவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. டிஏபி-யின் சமூக ஊடகங்களில், நவம்பர் 2-ஆம்…

2018-ல் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் , நிபுணர்கள் ஆருடம்

2008-ல், வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பட்டதாரிகள் மற்றும் வேலை அனுபவமும் இல்லாதவர்களுக்குத் திருப்திகரமான ஊதியத்தில் வேலை கிடைப்பது சவாலாக இருக்குமென வல்லுநர்கள் கூறுகிறார்கள். புதிய பதவிகளை வழங்குவதில் நிறுவனங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைந்த ஊதிய வேலைகளைப் பெற அல்லது ‘உபர்’…

அன்வாருக்குச் சிறந்த சிகிச்சை வழங்கப்படும், துணைப் பிரதமர் உறுதியளித்தார்

சிறைச்சாலையில் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிமுக்கு அரசாங்கம் சிறந்த சிகிச்சையை அளிக்கும் எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி உறுதியளித்தார். ஞாயிறன்று, தோள்களில் அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்ட அன்வாருக்கு, நிபுணத்துவ மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் அவர் கூறினார். "பொருத்தமான, நிபுணத்துவ மருத்துவர்களால்…

லிம் : வெள்ள நிவாரணத்திற்கான புதிய நிதி எதனையும் நஜிப்…

பினாங்கில் வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கான புதிய ஒதுக்கீடுகள் எதனையும் பிரதமர் நஜிப் அறிவிக்கவில்லை என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், மலேசிய திட்டத்தின் கீழ், வெளியிடப்படாத வெள்ள நிவாரண திட்டங்களுக்கான 1 பில்லியன் ரிங்கிட்டையே  நஜிப் குறிப்பிட்டார் என லிம் விளக்கப்படுத்தினார். நேற்று,…

நவம்பர் 7 2017 – அக்டோபர் புரட்சியின் 100-வது ஆண்டு…

அக்டோபர் புரட்சியின் 100-வது நிறைவாண்டு இன்று. அக்டோபர் புரட்சி 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளின் சிறப்பம்சமாக இருந்தது, இது பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர், அந்த ஆண்டின் மார்ச் மாதம் தொடங்கியது. நவம்பர் 7, 1917 (அந்நேரத்தில் ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட ஜூலியன் காலண்டர்படி அக்டோபர் 25, 1917) அன்று,…

மலேசியக் கோப்பை வெற்றி பணத்தை, ஜேடிதி வெள்ள நிவாரண பணிக்கு…

ஜொகூர் காற்பந்து குழுவான, ஜொகூர் டாருல் தக்‌ஷிம் (ஜேடிதி), மலேசிய கோப்பையை வென்று பெற்ற வெகுமதி பணத்தை, பினாங்கு வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக தெரிகிறது. கடந்த சனிக்கிழமை, 2017 மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில், கெடாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, ஜேடிதி மலேசியக் கோப்பையை…

இஸ்லாம் அல்லாதவர்கள் சூராவ்வில் தங்க அனுமதித்தேன் – பிலால் ஒப்புக்கொண்டார்

ஜோர்ஜ்டவுன், தாமான் ஃப்ரி ஸ்கூல் சூராவ்வில், சீன ஆடவர்களும் பெண்களும் தங்க தான் அனுமதித்ததை, அதன் பிலால் ஒப்புக்கொண்டார். சீனர்கள் சிலர் அந்தச் சூராவ்வில் தங்கியிருந்த படங்கள், தகவல் ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சப்னோ துகிஜோ எனும் அந்த 50 வயது பிலால், பெரித்தா ஹரியான் இணையப் பத்திரிக்கையிடம்…

வெள்ள நிலையை நேரில் காண, துணைப் பிரதமர் பினாங்கு சென்றார்

வெள்ள நிலையை நேரில் கண்டறிய, பினாங்கு மாநிலம் சென்ற துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடியை, மாநில முதல்வர் லிம் குவான் எங் இன்முகத்துடன் வரவேற்றார். அவருடன் டிஏபியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும் உடன் இருந்தார். “நாங்கள் வெவ்வேறு கருத்துகள் மற்றும் அரசியல் பாதை கொண்டிருந்தாலும், வெள்ளத்தில்…

இன்னும் அதிகம் வேண்டுமானால், பி.என்.-ஐ ஆதரியுங்கள், சீனர்களிடம் நஜிப் வேண்டுகோள்

14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, சீனர்களிடம் அக்கட்சியைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமென, இன்று பிரதமர் நஜிப் ரசாக் மசீச பேராளர்களைக் கேட்டுக்கொண்டார். “பொதுத் தேர்தலில் வென்றாலும், ஜனநாயக செயற்கட்சியால் (டிஏபி) அரசாங்கத்தை அமைக்க முடியாது என சீன சமூகத்திடம் சொல்லுங்கள்,” என பிரதமர் கூறினார். “அவர்களால்…

குவான் எங் : பினாங்கில் அவசரக்கால அறிவிப்பு இல்லை

15 மணி நேரத்திற்கும் மேலான, பலத்த காற்றையும், கடுமையான மழையையும் தொடர்ந்து, பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம்,  வரலாற்றிலேயே மிக மோசமானதாக கருதப்படுகிறது. சமீபத்தில் பினாங்கு மாநில சட்ட மன்றத்தில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் அக்டோபர் 15 வரை 119 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இவ்வாண்டு மட்டும்…

100 நோயாளிகள், 4 குழந்தைகள் பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம்

பினாங்கில், கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், 104 நோயாளிகள் மற்றும் புதிதாகப் பிறந்த நான்கு குழந்தைகள், நேற்று பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். வடகிழக்கு வட்டாரத்தில் இதுவரை இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அறை, பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை அறை மற்றும் கீழ்…

15 மணி நேர தொடர் அடைமழை, பலத்த காற்று –…

நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து, சுமார் 15 மணி நேரம் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால், பினாங்கு மாநிலம் நிலைகுத்தியது. வெள்ளம் காரணமாக, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 5 மாவட்டங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கனத்த மழையோடு, மதியம் 2 மணிக்குத் தொடங்கிய பலத்த காற்று அதிகாலை 5 மணி…

லியோ : மது, சலவை பிரச்சனையில் மதத்தைத் திணிக்க வேண்டாம்

இன, மத அடிப்படையில் இந்த நாட்டைப் பிரிக்க மலேசியர்கள் விரும்பவில்லை. எனவே, மதத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பீர் திருவிழா’ மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான சலவை கடை இரண்டையும் தொட்டு அவர் பேசினார். “ஒரு…

ஜோமோ : இந்தியர்களைக் கவர, பிரதிநிதிகளின் வழி பணப் பட்டுவாடா

இந்தியர்களின் மனதைக் கவர, பிரதமர் நஜிப் ரசாக் பிரதிநிகளின் வழி பணப் பட்டுவாடா செய்வதாக, பொருளாதார நிபுணர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் கூறினார். “பிரதமர், பிரதிநிதிகளின் வழி, ம.இ.கா.வினர் மட்டுமல்ல-பிறர் மூலமாகவும், சிறு சிறு இயக்கங்களை நிறுவி, பணத்தைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்கின்றனர் (இந்தியர்களுக்கு). "அவர்…

அஸ்மின் அலி : வாழ்க்கைச் செலவினங்கள் உயர ஜி.எஸ்.டி. காரணம்

எதிர்க்கட்சி மீதான தாக்குதல்களுக்கு இடையே, 2018 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர், நஜிப் ரசாக் போலல்லாமல், சிலாங்கூர் மந்திரி பெசார் முகம்மது அஸ்மின் அலி , சிலாங்கூர் 2018 பட்ஜெட்டை, மாநில அரசின் மீது கவனம் செலுத்தி தாக்கல் செய்தார். இருப்பினும், நேற்று பிற்பகல்…

பட்ஜெட் 2018 : கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சாரா…

கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் பிரதமரிடம் மனு சமர்பித்துள்ளன. இன்று புத்ராஜெயாவில், அக்கூட்டமைப்பைப் பிரதிநிதித்து , தீபகற்ப மாணவர் கூட்டமைப்பின் (காபுங்கான் பிலாஜார் செமனாஞ்ஞோங்) தலைவர், ஷம்ப்ரி முகமட் இசா,…

அட்டர்னி ஜெனரல் : கருத்து ஏதும் இல்லை

அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கெவின் மொரைசிடமிருந்து, பிரதமர் நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கு வரைவை பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரெவ்கேல்-பிரவுனின் கூற்றுக்குக் கருத்துரைக்க அட்டர்னி ஜெனரல் மறுத்துவிட்டார். இன்று மதியம் தொடர்பு கொண்டபோது, முகமது அபாண்டி அலி,  "எனக்கு எந்த கருத்துகளும் இல்லை,"…

பாஸ்தர் கோ வழக்கு : 4 சந்தேக நபர்களும் போலிஸ்…

பாஸ்தர் கோ கடத்தலில் கைதான 4 சந்தேக நபர்களும் போலிஸ் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டனர் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த விசாரணை அதிகாரி ஏஎஸ்பி சுபாரி முகமட் கூறினார். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கடத்தப்பட்ட கோக் வழக்கில், ஈடுபட்டதற்கான எந்த தகவலும் விசாரணையில்…

கிளேர் : நஜிப்புக்கு எதிரான வழக்கு வரைவு ஒன்றை கெவின்…

எம்.ஏ.சி.சி.-யின் துணை அரசு வழக்கறிஞர் கெவின் மொரைஸ், நஜிப்புக்கு எதிரான 1எம்டிபி தொடர்பான வழக்கு வரைவு ஒன்றை தனக்கு அனுப்பியதாக, சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் கூறியுள்ளார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், யுகேயில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், தமது தற்காப்பு…