மலாய் மொழியில் சிறப்பு விலக்கு – 2 அமைச்சர்களும் விளக்கமளிக்க…

மருத்துவத் துறை மாணவர்களுக்கு, எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி  தேர்ச்சிக்குச்   சிறப்பு விலக்கு அளிக்க வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் முடிவிற்கு, அதன் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவ்ன் இருவரும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் சுப்ரமணியம் இந்தச் சர்ச்சைக்…

அரசாங்க விமானத்தில் நஜிப் குடும்பத்தோடு உல்லாசப் பயணம்

பிரதமர் நஜிப் ரசாக் குடும்பத்துடன் தனது விடுமுறையைக் கழிக்க, அரசாங்கத்துக்குச் சொந்தமான வானூர்தியை மீண்டும் பயன்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜாவாபோஸ்ட்.கோம் வெளியிட்ட செய்தியின்படி, பிரதமரும் அவர்தம் குழுவினரும் ஜூன் 26-ல், 9எம்-என்.ஏ.ஏ. பதிவு எண் கொண்ட விமானத்தில் பாலியை வந்தடைந்ததாக தெரிகிறது. மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான இவ்விமானம், முக்கியப்…

மகாதீரிசம்: புத்ராஜெயாவைக் கைப்பற்றுமா?

– சாந்தலட்சுமி பெருமாள் , ஜூலை 2, 2017. 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்க முட்டிமோதி முயற்சித்த எதிர்க்கட்சிகள் இறுதியாக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம் ‘மகாதீர்’. ஊழல் நிறைந்த இந்தப் பாரிசான் ஆட்சியை ஒரு நிறைவுக்குக் கொண்டுவர மகாதீர் ஒருவரின் துணை அதிமுக்கியம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. பாரிசான்…

ஒத்திவைக்கப்பட்ட திருமண சீர்திருத்த சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட…

ஈப்போ-  கடந்த மார்ச் மாதம்,  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாமல், திடீரென ஒத்திவைக்கப்பட்ட சிவில் திருமண சீர்திருத்த சட்ட மசோதாவினை மீண்டும் இம்மாதம் தொடங்கவிருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமென  மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.…

பிரதமர் வேட்பாளர் : மகாதீர் தவிர யார் வேண்டுமானாலும்! –…

14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினால், டாக்டர் மகாதீர் முகமட்டை தவிர்த்து , எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானாலும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் தலைவர் டாக்டர் முகமது நசீர் ஹசிம் தெரிவித்தார். எதிர்க்கட்சியுடன் கைக்கோர்த்ததிலிருந்து, அந்த 91 வயது முன்னாள் பிரதமர் மாறுபட்ட…

சுங்கத்துறை : ராடார் தொலையவில்லை, நெதர்லாந்தில் உள்ளது

புத்ராஜெயா -  காணாமல் போன மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி, நெதர்லாந்தில் உள்ளதைச் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. “காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த உயர் தொழில்நுட்ப இராணுவ உபகரணம், அதன் இலக்கான நெதர்லாந்து, ரோட்டடாம் துறைமுகத்தைச் சென்றடைந்துவிட்டதால், முந்தையச் செய்திகளைச் சுங்கத்துறை மறுக்க விரும்புகிறது,” எனச் சுங்கத்துறையின் இயக்குநர்…

ராடார் கருவி ஒன்று ஜொகூர்பாரு துறைமுகத்தில் காணாமல் போனது

புத்ராஜெயா - நெதர்லாந்துக்குச் சொந்தமான, மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி ஒன்று, ஜொகூர் பாரு, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் காணாமல் போனது. ‘தி ஸ்டார்’ நாளிதழின் தகவல்படி, ஜொகூர் வழியாக நெதர்லாந்து செல்ல, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அக்கருவி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மித்தி) போக்குவரத்து…

பினாங்கு போலிடெக்னிக் உணவக விவகாரம்: இனவாதம் ஆக்காதீர்கள், பி.கமலநாதன் கோரிக்கை

கோலாலம்பூர்- செப்ராங் பிராய் போலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை மூட பணித்ததன் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த செய்தியை இனவாதம் ஆக்கவேண்டாம் என, துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார். அக்கல்லூரி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒப்பந்த விதிகளை மீறியதால்,…

அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாள்

26 ஜூன் - ‘அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாள்’. இந்நாள் சித்திரவதைக்கு எதிராகவும், சித்திரவதைக்கு ஆளானோரை நினைவு கோரவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனித நாகரீக வரலாற்றில் அந்நாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருந்ததால், ஐக்கிய நாடுகள் சபையும், ஜூன் 26 –…

மஇகா – கோரப்படாத 2,575 குடியுரிமை பிரச்சனைகளை முதலில் தீர்க்க…

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2575 குடியுரிமை பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படி மஇகா-வைக் கேட்டுக்கொண்டார். இவர்களில் சிலரின் விண்ணப்பங்களுக்குப் புத்ராஜெயா, தேசியப் பதிவு இலாகாவின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், மாவட்டப் பதிவு இலாகாவிலிருந்து இன்னும்…

கேமரன் மலை, பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்பு திட்டத்தைக் கைவிடுக,…

கேமரன் மலை - பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்புக்கு எதிராக அவ்வட்டார மக்கள் ஒன்றுகூடி, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இன்று காலை, சுமார் 500 பேர் கையெழுத்திட்ட     கொரிக்கை மனு ஒன்று, மலேசிய சோசலிசக் கட்சி, கேமரன் மலை கிளையின் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித் துறை…

நவீன் கொலை வழக்கு: தூக்குத்தண்டனை சாத்தியமல்ல, மூத்த வழக்குரைஞர்கள் கருத்து

பெத்தாலிங் ஜெயா – தி.நவீன் மரணத்தில் தொடர்புடைய 5 இளையர்களும்  குற்றவியல் சட்டத்தின்கீழ், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம். ஆனால், கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ளும்   சாத்தியம் இல்லை. சந்தேக நபர்களில் நால்வர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்டாய மரண தண்டனை விதித்தல் அல்லது பதிவு…

ஜூல்பர்ஹான் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் மீண்டும் கல்வியைத்…

மலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழத்தைச் (யூ.பி.என்.எம்.) சார்ந்த மாணவர் ஜூல்பர்ஹான் ஒஸ்மான் ஷூல்கர்னாய்ன் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவர்கள் 13 பேரும் ஜாமினில் விடுதலையானதைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரலாம் என உயர்க்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார்.  அப்பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு, கடற்படை பிரிவு…

வீடு கிடைக்கும் வரை, பெர்ஜயாவின் திட்டங்களை சிலாங்கூர் அரசு நிறுத்த…

முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கும் வரை, பெர்ஜயா நிறுவனத்திற்கு நிலப்பட்டா அல்லது அவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பெர்ஜயா சிட்டி தொழிலாளர்கள் வீட்டுச் செயற்குழு சிலாங்கூர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. “புக்கிட் தகார், கோல குபு பாருவில் சுமார் 15 காணி நிலங்களை நாங்கள்…

புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவுபெறும்?, வட்டாரப்…

    இன்று காலை, புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதைக் கண்டித்து, வட்டார அரசுசார இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர். ஜொகூர், ஸ்கூடாயிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் கடந்த செப்டம்பர்…

பொதுத்தேர்தல்: ஹராப்பானுடன் இருக்கைகளைப் பகிர இயலாது, பி.எஸ்.எம். அறிவிப்பு

14 ஆவது பொதுத் தேர்தலில் தேர்தல் உடன்படிக்கை ஏதும் இல்லாத நிலையில், பக்காத்தான் ஹரப்பானுக்கு பி.எஸ்.எம்  அதன் இடங்களை விட்டுக்கொடுக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில், பி.எஸ்.எம். 20 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் அதன்  வேட்பாளார்களை நிறுத்த…