பெருநாள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பி.டி.பி.ஆர். – கல்வி அமைச்சு…

நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு, பள்ளி அமர்வு இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) முறையில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் சற்று முன்னர் தெரிவித்தார். இந்தக் கற்றல் அமர்வு, ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு (குழு ஏ) ஆகிய…

12 வயதிற்குட்பட்ட 23,000-க்கும் அதிகமான மாணவர்களுக்குக் கோவிட் -19 நோய்…

இந்த ஆண்டு, 12 வயதிற்குட்பட்ட மொத்தம் 23,739 மாணவர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார். அதேசமயம், 2020-ஆம் ஆண்டில் இதுபோன்று 8,369 நேர்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. "மாணவர் இடையேயான கலப்பு காரணமாகப், பள்ளிகளில் எளிதாக தொற்றுகள் பரவுகின்றன என்பதை இந்தத்…

இன்று 2,776 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 1,023

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,776 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது, அதில் 1,023 நேர்வுகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இன்று 13 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு பலியானவர் எண்ணிக்கை 1,449-ஆக உயர்ந்துள்ளது. புதிய இறப்புகள்…

கோவிட் -19 : பள்ளி அமர்வைத் தொடரக் கல்வியமைச்சு உறுதிபூண்டுள்ளது

பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் செந்தர இயங்குதல் நடைமுறைகளால் (எஸ்ஓபி), கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதால், கல்வி அமைச்சு பள்ளி அமர்வைத் தொடர உறுதிபூண்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டாக்டர் மொஹமட் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். இதுவரைப் பெறப்பட்ட தரவுகள், பள்ளி பாதுகாப்பாக இருப்பதையும், பல்வேறு…

5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை, வெளிநாட்டு தொழிலாளி தற்கொலை

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில், பாகிஸ்தான் கட்டுமானத் தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். 30 வயதான பாதிக்கப்பட்டவர், தான் பணிபுரிந்த நிறுவனம் தனது சம்பளத்தை ஐந்து மாதங்களாகச் செலுத்தவில்லை என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது. முன்னதாக,…

மலேரியா : விலங்கு நோய்த்தொற்றுகளில் மலேசியா தனது கவனத்தை விரிவுபடுத்துகிறது

மனித மலேரியா நோய்த்தொற்றில் சுழியம் இலக்கை அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, மலேரியா சம்பந்தப்பட்ட விலங்கு (ஸூனோடிக்) நோய்த்தொற்றுகளில் மலேசியா தனது கவனத்தை விரிவுபடுத்தும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார். உள்ளூர் மலேரியா நோய்த்தொற்றின் நேர்வுகளின் சுழிய இலக்கு, தொடர்ச்சியாக 2018 முதல் 2020 வரையில்,…

பினாங்கில் 20 பள்ளிகள் 2 நாட்களுக்கு மூடப்பட்டன

பினாங்கில், கோவிட்-19 பரவியதன் காரணமாக, 20 பள்ளிகள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகப் பினாங்கு கல்வித் துறை இயக்குநர் அப்துல் ரஷீத் அப்துல் சமாட் தெரிவித்தார். அவற்றுள் இடைநிலைபள்ளிகளும் தொடக்கப் பள்ளிகளும் அடங்கும் என்று கூறிய அவர், விரிவாகக் கூற மறுத்துவிட்டார். "சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளும் துப்புரவு…

இன்று 2,690 புதிய நேர்வுகள், 10 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,690 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடர்ச்சியாக 11-வது நாளாக, புதிய நோய்த்தொற்றுகள் 2,000-ஐ தாண்டி பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இன்று 10 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,436 பேர்…

பெர்லிஸ் அம்னோ தலைவர் பதவியிலிருந்து ஷாஹிடான் நீக்கம்

பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் பதவியில் இருந்து ஷாஹிடான் காசிமை ஜாஹிட் நீக்கினார். அந்தப் பதவியை இனி, பெர்லிஸ் மந்திரி பெசார் அஸ்லான் மான் வகிப்பார் என அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அறிவித்தார். "இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. ஷாஹிடான் காசிம் தனது பதவிக்காலம்…

கிளந்தானில் அனைத்து பள்ளிகளும் மே 1 வரை மூடப்படும்

கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதி வரையில் கிளந்தானில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவிடப்பட்டன. இத்தகவலை, நேற்று மற்றும் இன்றிரவு, இரண்டு தனித்தனி அறிவிப்புகள் மூலம் மாநிலக் கல்வித் துறை (ஜே.பி.என்.) இயக்குநர் சுல்கர்னை ஃபௌஸி தெரிவித்தார். நேற்றைய ஓர் அறிவிப்பில், ஏழு…

ஃபாஹ்மி ரேசாவுக்குத் தடுப்புக் காவல் ஒருநாள் மட்டுமே

வடிவமைப்புக் கலைஞரும் ஆர்வலருமான ஃபாஹ்மி ரேசா தேசத்துரோகக் குற்றச்சாட்டிற்காக ஒருநாள் தடுத்து வைக்கப்பட்டார், இன்று பிற்பகல் அவர் விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின் போது, ஃபாஹ்மி-ஐ நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்க கேட்டு போலிசார் மாஜிஸ்திரேட்டிடம் விண்ணப்பம்…

‘முஹைதீனுக்கு அதிக ஆதரவு, பி.என். சரியான பாதையில் உள்ளது என்பதற்கு…

ஒரு கணக்கெடுப்பில் காட்டப்பட்டுள்ளபடி, பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவு தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் சரியான பாதையில் செல்வதைக் காட்டுகிறது என்று ஸ்ரீகாண்டி பெர்சத்து துணைத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெரிவித்தார். தீபகற்ப மலேசியாவில், 67 விழுக்காடு வாக்காளர்கள் முஹைதீனின் தலைமையில் திருப்தி அடைந்துள்ளனர் என்று மெர்டேக்கா…

‘அவசர அவசரமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டன’, அமைச்சர் பதவி விலக வேண்டும்…

இன்றைய அதிநவீனக் கல்வி நிறுவனங்களில், கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பிற்குக் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். [caption id="attachment_189120" align="aligncenter" width="1240"] பள்ளிகள், ‘அவசர அவசர’மாக மீண்டும் திறக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறினர்.[/caption] கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கோவிட் -19…

‘தேர்ந்தெடுக்கப்பட்ட தண்டனையை’ நிறுத்துக, அரசாங்கத்திற்கு வலியுறுத்து

Kitabantukita.org (கீத்தாபந்துகீத்தா) என்றத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, இரண்டு தாய்மொழி போராட்ட அமைப்புகள், தாய்மொழி பள்ளிகள் மீதான "அச்சுறுத்தல்கள்" குறித்து மத்திய அரசு மௌனம் சாதிப்பது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் இருப்பது, தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் அவை வலியுறுத்தின. சீன…

அகோங்கைச் சந்திக்க ஏற்பாடுகள் : செவ்வாய்க்கிழமை அவசரகால நிறைவு செயற்குழு…

யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை எதிர்கொள்ளும் தயாரிப்பில், அவசரகாலப் பிரகடன நிறைவு செயற்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் காலிட் சமாட், அகோங்கை எதிர்கொள்ளப் போகும் தூதுக்குழுவில் யார் யார் இணைவார்கள் என்பது குறித்தும் அதில் விவாதிக்கப்படும்…

டாங் வாங்கி ஐ.பி.டி.-யில் ஃபாஹ்மி ரெசாவுக்காக நண்பர்கள் கூட்டம்

தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆர்வலரும் வடிவமைப்பாளருமான ஃபாஹ்மி ரேசாவுக்கு விசுவாசமான நண்பர்கள் சுமார் 20 பேர், இன்று காலை டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்திற்கு (ஐ.பி.டி.) வெளியே ஒன்று கூடினர். இன்று காலை 10 மணிக்குத் திட்டமிடப்பட்ட தடுப்புக்காவல் விண்ணப்பத்திற்கு, ஃபாஹ்மியை வழக்கறிஞர் யோஹேந்திரா நடராஜன்…

‘ஃபாஹ்மியை நிபந்தனையின்றி விடுதலை செய்க’ – மனித உரிமை தன்னார்வத்…

நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஆர்வலரும் சுயாதீன வடிவமைப்பாளருமான ஃபாஹ்மி ரேஸாவை உடனடியாக விடுவிக்குமாறு பல சிவில் சமூக அமைப்புகள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தன. கேலி பொருட்களைத் தயாரிப்பது குற்றம் அல்ல என்று அவர்கள் கூறினார்கள். தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ஐ மீறுதல் மற்றும் தேசத் துரோகக்…

கோவிட் -19 : நெருங்கிய தொடர்புகொண்ட ஆசிரியர்களுக்கு உடனடி தனிமைப்படுத்துதல்…

கோவிட் -19 நேர்மறை வழக்குகளுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட ஆசிரியர்களுக்கு, மாவட்டச் சுகாதார அலுவலகத்தின் (பி.கே.டி.) தனிமைப்படுத்துதல் கடிதத்திற்காகக் காத்திருக்காமல், தனிமைப்படுத்தும் விடுப்பு வழங்குமாறு தீபகற்ப மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைத் தொழிற்சங்கம் (என்.யு.டி.பி) கல்வி அமைச்சிடம் கோரியுள்ளது. என்.யு.டி.பி. தலைமைச் செயலாளர் ஹாரி தான் ஹுவாட் ஹோக்…

ஆய்வு : ஓராங் அஸ்லி சமூகம் அரசியல் ரீதியான தகவல்களை…

கிளந்தான், சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த சில ஓராங் அஸ்லி பழங்குடியினர், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களில் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. கிளந்தான், குவா மூசாங்கில் மூன்று குடியேற்றங்களை உள்ளடக்கிய ஒராங் அஸ்லி தெமியார் சமூகங்கள், சபாவில் உள்ள…

அதிகமானோர் பலியான பிறகுதான் முஹைதீன் பதவி விலகுவாரா? – ஹசான்…

கோவிட் -19 தொற்றுக்கு எதிராக, தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கம் தோல்வி அடைந்ததற்கான ஆதாரமாக பல வாதங்களைப் பட்டியலிடலாம். எனவே, அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் பிரதமர் முஹைதீன் யாசின் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இரமலான் மாதத்தில், ஒரு முஸ்லீம் பிரதமரை இராஜினாமா செய்யக் கேட்பது அழகான கோரிக்கை…

லைனாஸ் மீதான நிபந்தனைகளைக் கைவிடுமாறு கேட்டதில்லை – இராஜதந்திரி மறுப்பு

மலேசியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஆண்ட்ரூ கோலெட்ஸினோவ்ஸ்கி, 2019-ஆம் ஆண்டில், லைனாஸ் மலேசியா (லைனாஸ்) மீதான உரிம நிபந்தனைகளைக் கைவிடுமாறு நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். லைனாஸுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் நீக்கவோ மாற்றவோ ஆஸ்திரேலியா மலேசியாவிடம் கேட்கவில்லை;…

இன்று 2,875 புதிய நேர்வுகள், 7 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,875 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிளந்தான் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அதனை அடுத்து சிலாங்கூரும் சரவாக்கும் உள்ளன. இன்று 7 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில்…

அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு உதவி

கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழான 2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு, RM500 சிறப்பு நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது. இது அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளுக்கான தயாரிப்புகளுக்கு உதவும். “சேவை ஒப்பந்தம், சேவைக்கான ஒப்பந்தம் (Contract Of Service, Contract For Service),…