‘பாரிசானுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’, ஹிண்ட்ராப் 14-வது பொதுத் தேர்தலில்…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ‘பாரிசான் நேசனலுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’ என ஹிண்ட்ராப்    இயக்கம் நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்யப்போவதாக அதன் தேசியத் தலைவர் வேதமூர்த்தி பொன்னுசாமி தெரிவித்துள்ளார். அண்மையில், பிகேஆர் கூலாய் கிளை ஏற்பாடு செய்திருந்த, சுதந்திரத் தினத் தேநீர் விருந்தில் கலந்துகொண்ட…

பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல், பி.எஸ்.எம். கண்டனம்

தமிழ் மலர் பத்திரிக்கையின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அதன் உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜன் மற்றும்  தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமி ஆகிய இருவரையும் கும்பல் ஒன்று  தாக்கியதை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சரஸ்வதி முத்து தெரிவித்தார்.…

‘பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்துங்கள், எங்களை விமர்சித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்’,…

ஜ.செ.க.-வும் பக்காத்தான் ஹராப்பானும் பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மலேசிய சோசலிசக் கட்சியை (பி.எஸ்.எம்.) விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என அக்கட்சியின், 14-ஆம் பொதுத்தேர்தலின் தேசியப் பிரச்சார இயக்குநர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார். “எதிர்வரும் பொதுத்தேர்தலில், தேசிய அளவில் 3% மட்டுமே பி.எஸ்.எம். போட்டியிடவிருக்கிறது, மற்ற 97%…

பி.எஸ்.எம். கட்சியின் ஒரே ஒரு நாற்காலிக்கும் ஹராப்பான் குறிவைக்கிறது

எதிர்வரும் பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கைவசமிருக்கும் ஒரே ஒரு நாற்காலியைக் கைப்பற்ற, பக்காத்தான் ஹராப்பான் களமிறங்குமெனப் பேராக் மாநில ஜனநாயகச் செயற்கட்சியின் தலைவர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார். “ஹராப்பான் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் போட்டியிடும், அம்னோ-பாரிசானுக்குப் பதிலாக, சுங்கை சிப்புட் தொகுதி மக்கள்…

‘காலிட்டுக்கு இன்னும் தீர்கப்படாத பணிகள் இருக்கின்றன’- சிட்டிசன் எக்‌ஷக் குரூப்

முன்னாள் காவல்துறைத் தலைவர், காலிட் அபு பாக்காருக்குத் ‘தீர்க்கப்படாத பணிகள்’ இன்னும் இருக்கிறது என அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று கூறியுள்ளது. பாஸ்தர் ரெய்மண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவே இல்லை, எனவே, காலிட்டின் பணி இன்னும் நிறைவுபெறவில்லை என, காணாமல் போனோருக்கான…

டோனி புவா: ஐபிஐசி கடன்களை, 1எம்டிபி-ஆல் எப்படி செலுத்த முடியும்?

சர்வதேசப் பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்தின் (ஐபிஐசி)  1எம்டிபி நிலுவைக் கடனை அடைக்க வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படுமா என பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கேள்வி எழுப்பினார். பலமுறை கேட்டும், 1எம்டிபி மற்றும் நிதி அமைச்சும் வாய்மூடியே கிடக்கின்றன, பணம் எங்கிருந்து வருமென…

ஹராப்பானின் முடிவை அஸ்மின் ஏற்றுக்கொண்டார், இருப்பினும்…

கடந்த ஆகஸ்ட் 29-ல், பாஸ் உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சபை எடுத்த முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அஸ்மின் அலி; இருப்பினும், யாருடனும் பேசுவதற்கு தனக்கு இன்னும் சுதந்திரம் உண்டு என்றும் கூறினார். “யாருடனும் பேச எனக்கு சுதந்திரம் உண்டு. செவ்வாய் இரவன்று, நான்…

பாஸுடன் ஒத்துழைப்பு, முடிவெடுக்க நஜிப்புக்கு முழு அதிகாரம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உடன் ஒத்துழைக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதன் தலைவர் நஜிப்பிடம் விட்டுவிட அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்துள்ளதாக அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா கூறியுள்ளார். "உச்சமன்றத்தின் கூற்றுப்படி, ஒத்துழைப்பு என்றால் ஒரு நோக்கம், புலம், முறை உள்ளது. தளர்வான முறையில்…

ஆர்சிஐ விசாரணைக்கு மகாதீர், அன்வார் அழைக்கப்படுவார்களா?

ஃபோரெக்ஸ் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) மகாதீர் மற்றும் அன்வார் இருவரையும் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதா? என்பதனைச் சம்பந்தப்பட்ட அவ்விரண்டு தலைவர்களின் வழக்குரைஞர்களும் உறுதிபடுத்திகொள்ள முனைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த இருவரையும், ஆர்சிஐ அழைக்க விரும்புகிறதா என்று, இன்னும் தங்களுக்குத் தெரியவில்லை என டாக்டர் மகாதீரின் வழக்குரைஞர் முகமட் ஹானிஃப்…

14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் – பாஸ் ஒத்துழைப்பு இல்லை

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் 4 உறுப்புக்கட்சிகளும் முடிவெடுத்துள்ளன. நேற்று சுமார் 4 மணி நேரம் நடந்த, பக்காத்தான் – பாஸ் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பானின் தலைமை இம்முடிவை வெளியிட்டுள்ளது. மேலும், தேர்தலில் பாஸ் மற்றும்…

14-வது பொதுத் தேர்தலில், ம.இ.கா. பக்காத்தானுடன் இணையும் சாத்தியம் உண்டு?

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ம.இ.கா. பக்காத்தானுடன் இணையும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை என, ம.இ.கா. தகவல் பிரிவின் முன்னாள் தலைவர் எல்.சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். தற்போது நெருக்கடியில் இருக்கும் ம.இ.கா.-வின் வழக்கு, அதன் முன்னாள் தேசியத் தலைவர் ஜி.பழனிவேலுவுக்குச் சாதகமாக போகும் பட்சத்தில், ம.இ.கா. பக்காத்தானுடன் கைக்குழுக்கும் சாத்தியம்…

மகாதீர் : பாரிசானைத் தோற்கடிக்க, நம் சொந்த நலன்களைத் தியாகம்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியை வெல்ல விரும்பினால், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு, பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் டாக்டர் மகாதீர், அக்கூட்டணியின் உறுப்புக்கட்சிகளுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். "தியாகம் செய்வதோடு, நாம் நமது நண்பர்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். நமது கட்சி…

பி.கே.ஆரிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும், ஷைட் ஆலோசணை

பக்காத்தான் ஹாராப்பன் கட்டமைப்பிற்கு வெளியே, பாஸ் உடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகளைப் பிகேஆர்,  விளக்க வேண்டும் என்று ஷைட் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார். மேலும், இன்றிரவு நடைபெறவுள்ள பக்காத்தான் கூட்டணி சந்திப்பில், அத்திட்டத்தை நிராகரிக்கும் அமானா, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். "அமானா இன்று தங்கள்…

பி.எஸ்.எம்: நஜிப் ஹிண்ட்ராப்பைக் கையாண்ட விதத்தை டாக்டர் மகாதீர் பின்பற்றுகிறார்

13-வது பொதுத் தேர்தலில், மலேசிய இந்தியர்களின் ஓட்டுகளைக் கவர, நஜிப் கையாண்ட வழியை, இன்று, டாக்டர் மகாதீர் பின்பற்றுகிறார் என்று மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார். ஹிண்ராப்ட் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தியை டாக்டர் மகாதீர் சந்தித்தது, பக்காத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்களின் ஆதரவைத்…

சக மாணவனுக்கு மரணம் விளைவித்தான், 6-ஆம் ஆண்டு மாணவன் கைது

சரவாக், காபிட்டில் ஏழு வயது மாணவனுக்கு மரணம் விளைவித்ததற்காக ஆறாம் ஆண்டு மாணவன் ஒருவன், நேற்று போலிசாரால் கைது செய்யப்பட்டான். கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள ஒரு விடுதிப்பள்ளியில், சக மாணவனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்த முதலாம் ஆண்டு மாணவன், பள்ளி நிர்வாகத்தினரால், சிபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இருப்பினும், சிகிச்சை…

‘காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு’ நூல் வெளியீடும்…

மலேசிய சோசலிசக் கட்சி, நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில், ‘The Forgotten Malaysian Indian History in Colonial Era’ (காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு) எனும் வரலாற்று நூல் வெளியீடும் கருத்துக்களமும் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது :- நாள்   : ஆகஸ்ட் 26, 2017 (சனிக்கிழமை)…

‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் காலமானார்

நாடறிந்த சமூகச் சேவையாளர், ‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் சற்றுமுன், நோயின் காரணமாகக் காலமானார். அன்னாருக்கு வயது 68. நுரையீரலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த சில நாட்களாக, கே.பி.ஜே. டாமான்சரா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையத்தில் (ஐ.சி.யு.) அவர் சிகிச்சை பெற்று…

மெமாலி சம்பவம் : முதலில் இறந்தது போலிஸ்காரர்கள், மகாதீர் கூறுகிறார்

மெமாலி சம்பவத்தில் முதலில் தாக்கப்பட்டது போலிஸ்காரர்களே என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிராமவாசிகள் போலிஸ்காரர்களை மறைந்திருந்து தாக்கியதாகவும், அத்தாக்குதலில் சார்ஜன் ஒருவரும் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இறந்ததோடு, இன்னொரு கான்ஸ்டபல் படுகாயம் அடைந்ததாக அச்சமயத்தில் இடைக்காலப் பிரதமராக இருந்த முசா ஹீத்தாம், சம்பவம் நடந்து முடிந்த மறுநாள்…

ஊடகச் சுதந்திரம் இப்போது சிறப்பாக உள்ளது? அடிப்படையற்றக் கூற்று, முன்னாள்…

டாக்டர் மகாதிர் முகமது தலைமைத்துவக் காலத்தைவிட, தற்போது ஊடகச் சுதந்திரம் சிறப்பாக உள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி கூறுவது தவறு என்று இரண்டு மூத்தப் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் மகாதீர், மாதத்தில் ஒரு முறையாவது பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என உத்துசான் மலேசியா…

முகமட் ஹசான் : திருவள்ளுவர் சிலையை மூடச் சொன்னதில் எந்த…

சிரம்பானில், ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை மூடச் சொன்னதில் எந்தவொரு தீய எண்ணமும் இல்லையென, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் இன்று தெரிவித்தார். சமீபத்தில் லாடாங் ஷாங்காய் தமிழ்ப்பள்ளிக்கு முகமட்டின் வருகைக்கு முன், திருவள்ளுவர் சிலை மூடச்செய்ததற்கு, மந்திரி பெசாரின் அலுவலகம்தான் காரணம் எனக்கூறி, எதிர்க்கட்சி…

ரிம 2.6 பில்லியன் ‘நன்கொடை’, கேள்வி எழுப்பிய ரஃபிஷியைப் போலிஸ்…

பிரதமர் நஜிப் ரஷாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்த 2.6 பில்லியன் ரிங்கிட் குறித்து, தனது வலைப்பதிவில் கருத்து தெரிவித்ததன் விழைவு, மக்கள் நீதி கட்சியின்  உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி, இன்று டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் விளக்கமளிக்க அழைக்கப்பட்டார். சவுதி அரேபியா, மெக்காவில் மெட்ரோ…

14-வது பொதுத் தேர்தல் : அம்னோவின் எழுச்சி, வீழ்ச்சியை நிர்ணயிக்கும்

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தல், அம்னோவினால் ஆதரிக்கப்படும் தேசிய முன்னணியின் எழுச்சி அல்லது வீழ்ச்சியை நிர்ணயிக்கும் ஒன்று என்பதால், புத்ரி அம்னோ உட்பட, அனைத்து அம்னோ உறுப்பினர்களும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் எனப் புத்ரி அம்னோ இயக்கத்தின் துணைத் தலைவர் ஷஹிடா ஷாரிக் கான்…

சீனாவுடனான மேம்பாட்டுத் திட்டங்கள், நாட்டை விற்பதற்கு அல்ல

கிழக்குக் கடற்கரை இரயில்வேத் திட்டத்தில் (இ.சி.ஆர்.எல்.) சீனா முதலீடு செய்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் நாட்டை விற்க முனைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குறைகூறத் தொடங்கிவிட்டனர் என்று அம்னோ உச்சமன்ற  உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இந்த மெகா திட்டத்தில் ஒட்டுமொத்தமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச்  சொந்தமானது அல்ல, பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கும்…