நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது ரமலான் சந்தைகள் இயங்க அனுமதி…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நாடு முழுவதும் ரமலான் சந்தைகளை நடத்த அரசாங்கம் அனுமதிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். மக்கள், வல்லுநர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்ட பிரதமர் முகிதீன் யாசினின் மூன்று முடிவுகளில் இந்த விவகாரமும்…

‘முடி திருத்தும் கடைகள் இயங்க அனுமதி இல்லை’

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முடி திருத்தும் கடைகள் மற்றும் மூக்குக்கண்ணாடிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை என்று இன்று தெரிவித்தார். "அரசாங்கம் எப்போதும் மக்களின் குரலைக் கேட்கும். இப்போதும் மக்களின் குரலை கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில நிபுணர்களின் ஆலோசனையையும்…

“வைசாகி, சித்திரைப் புத்தாண்டு, விஷு – பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்”

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி இன்றும் நாளையும் வைசாக்கி, சித்திரைப் புத்தாண்டு மற்றும் விஷு (மலையாளி புத்தாண்டு) கொண்டாட்டங்களை மலேசிய இந்துக்கள் வீட்டில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான், இந்த ஆண்டு, தமிழ் இந்துக்கள் மற்றும் மலையாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் புதிய…

பி40 குடும்பங்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏன்?

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள பி40 குடும்பங்களுக்கான உணவு கூடைகளை விநியோகிப்பதில் பெண்கள், குடும்பம் நல மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (KPWKM) "தாமதங்கள்" குறித்து, சில எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 225,871 வீடுகளுக்கு உணவு கூடைகள் கிடைத்துள்ளதாகவும், இது சுமார் ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு…

26 சிவப்பு மண்டல மாவட்டங்கள்; லெம்பா பந்தாயில் கிட்டத்தட்ட 500…

நாட்டில், கோவிட்-19 சிவப்பு மண்டலமாக 26 மாவட்டங்கள் உள்ளன. லெம்பா பந்தாயில் கிட்டத்தட்ட 500 பாதிப்புகள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் படி, அம்மாவட்டத்தில் நேற்று மதியம் வரை 496 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.…

கிளந்தான் சட்டசபை 45 நிமிடங்களுக்கு கூடியது

கிளந்தான் மாநில சட்டசபை இன்று கோத்தா பாருவில் உள்ள டாருல் நைம் வளாகத்தில் 45 நிமிடங்களுக்கு கூடியது. மார்ச் 23 முதல் 26 வரையிலான அதன் அசல் தேதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட பின்னர், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் இன்று மாநாடு நடத்தப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு வெளி அழைப்பிதழ்…

“அதீத அதிகாரத்தை கைப்பற்ற கோவிட் 19ஐ அரசுகள் பயன்படுத்தும்” –…

கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம் சாம்ஸ்கி, "தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து…

காதிர் ஜாசின்: கோவிட்-19ஐ முகிதீன் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்கிறார்

பிரதம மந்திரி பதவியை நிலைநிறுத்திக் கொள்ள முகிதீன் யாசின் கோவிட்-19 தொற்றுநோயையும் பொருளாதார கொந்தளிப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ஏ காதிர் ஜாசின் கூறுகிறார். பாகோ எம்.பி.-யான முகிதீன், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதன் மூலம் ஆதரவைப் பெற அவருக்கு போதுமான…

கம்போங் பாரு PKNS அடுக்குமாடி குடியிருப்பில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது

தலைநகரில் கம்போங் பாரு சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக குடியிருப்பு பகுதியில் (Rumah Pangsa Perbadanan Kemajuan Negeri Selangor (PKNS), Kampung Baru) கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாகினி இன்று பிற்பகல் அக்குடியிருப்பு பகுதியில் நடத்திய ஆய்வில், அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும்…

இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் போலீஸ்…

பெட்டாலிங் ஜெயா அருகே உள்ள தங்கும் விடுதியில் நேற்று இரவு இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 மற்றும் 37 வயதுடைய அப்பெண்களை தங்கும் விடுதியில் இருந்து மீட்ட பின்னர், 30 வயதுடைய அந்த சந்தேக நபர் காவலாளர்களால்…

கோவிட்-19: 153 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 113 நோயாளிகள்…

கோவிட்-19 நோய்த்தொற்றினால் இன்று 153 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வரை மொத்தம் 4,683 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று மேலும் மூன்று நோயாளிகள் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 76ஆக உள்ளது. 113…

ஜாலான் மஸ்ஜித் இந்தியா மூடப்பட்டுள்ளது

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இரண்டு கட்டிடங்கள் தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அங்கு வாழும் மக்கள் கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையை மேற்கொள்ள அனுமதிக்க இப்பகுதியில் உள்ள அனைத்து வணிகங்களும் இன்று மூடப்பட்டன. இன்று காலை மலேசியாகினி நடத்திய ஆய்வில், இப்பகுதியில் உள்ள அனைத்து…

அறிக்கை: ஙாவுக்கு பதிலாகா அசாலினா துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று…

பெரிக்காத்தான் தேசிய கூட்டணி அரசாங்கம், ஙா கோர் மிங் என்பவருக்கு பதிலாக அசாலினா ஓத்மான் சைட்டை நாடாளுமன்ற துணை சபாநாயகராக நியமிக்கும் என்று சின் செவ் டெய்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தை அம்னோ தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடி அசாலினாவுக்கு அறிவித்ததாக அம்னோவிலிருந்து ஒரு ஆதாரம் மேற்கோளிட்டுள்ளது.…

கோவிட்-19: புதிய சிவப்பு மண்டலம் இல்லை

கோலாலம்பூர், ஏப்ரல் 12 - நேற்று மதிய நிலவரப்படி மொத்தம் இருபது மாவட்டங்கள் கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. லெம்பா பந்தாய் அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான பாதிப்புகளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின்…

கொரோனா வைரசால் அமெரிக்காவில் 20,000 பேர் உயிரிழப்பு; ஆபத்தில் பொருளாதாரம்

கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதுவரை 1,08,702 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை…

சுங்கை புலோ மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை நன்கொடையாக வழங்கினார் பேரரசி

மாட்சிமை தங்கிய பேரரசி, துங்கு ஹஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா அவர்கள், சுங்கை புலோ மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 100 படுக்கைகளையும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மேலும் 50 படுக்கைகளையும் நன்கொடையாக வழங்கினார். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் (பேஸ்புக்) மூலம் அவருக்கு நன்றியைத்…

கோவிட்-19: மூன்று புதிய மரணங்கள், 184 பாதிப்புகள், 165 பேர்…

கொரோனா வைரஸ் | புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை முந்தியுள்ளது. 184 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளன. மூன்று புதிய இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல்…

உயர்க்கல்வி மாணவர்கள் வீட்டிற்குத் திரும்ப இன்னும் அனுமதி இல்லை –…

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் தற்போது உயர்க்கல்வி வளாகங்களில் தங்கி இருக்கும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இன்னும் அனுமதி இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை ஏற்கனவே உயர்க்கல்வி அமைச்சிடமிருந்து (Kementerian Pengajian Tinggi (KPT) பரிந்துரையைப் பெற்றுள்ளது…

சிட்டி ஜைலாவின் மறைமுக ஆலோசனை தவறானது என்கிறது Sister in…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது கணவன் மனைவியின் உறவு குறித்து, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிட்டி ஜைலா முகமட் யூசோப்பின் ஆலோசனையின் பின்னால் மறைந்திருக்கும் செய்தியை Sister in Islam (SIS) ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கருத்துரைத்துள்ளது. சிட்டி ஜைலாவின் அந்த…

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி

உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியைவிட அமெரிக்காவில் அதிகம் பேர் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது…

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை உலக நாடுகள் அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது கிருமி மீண்டும் பரவ வழிவகுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். "சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீட்டில்…

மத்திய மலாக்கா இப்போது கோவிட்-19 இன் சிவப்பு மண்டலமாக உள்ளது

மத்திய மலாக்கா மாவட்டம் (Melaka Tengah) கோவிட்-19 சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சமூக ஊடகங்கள் மூலம் இன்று பகிரப்பட்ட விளக்கப்படத்தின் படி, அம்மாவட்டத்தில் 44 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கோலாலம்பூரின் லெம்பா பந்தாய், 427 பாதிப்புகளுடன் அதிக கோவிட்-19 நேர்மறை பாதிப்பு பகுதியாக உள்ளது.…

உலகளவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. அதிகபட்சமாக இத்தாலியில்…