பிரதமர் மோடி ரஷ்யா வர அழைப்பு விடுத்தார் ரஷ்யா அதிபர்…

பிரதமர் மோடி ரஷ்யா வர வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவர் ரஷ்யதுணைப் பிரதமர் டெனிஸ் மான்ட்ரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.…

ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வர வேண்டும்

இண்டியா கூட்டணியின் சார்பில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே முன்மொழியப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.…

நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும்

நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் நகரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "இண்டியா கூட்டணிக்கு திட்டம் இல்லை; தலைமை இல்லை;…

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண…

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கான மரண தண்டனையானது, சிறை தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில்…

நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை…

தமிழ்நாடு, எண்ணூர் அமோனியா வாயுக் கசிவைத் தொடர்ந்து ஆலையை மூட…

சென்னை - எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என கூறியுள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐஐடி நிபுணர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழு ஒன்று அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய ஜார்க்கண்ட மாணவர் கைது

கடந்த 2019-ல் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் நடைபெறும் என்று அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜார்க்கண்டை சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த மாணவர் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் தனது சமூக வலைதள…

வட இந்தியாவை வாடி வதைக்கும் குளிர் – ரயில் மற்றும்…

வட இந்தியாவில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லியில், 110 விமானங்கள், 25 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கடும் குளிர்நிலை தொடர்வதால் தேசிய தலைநகருக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு பனி மூட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக…

வணிக கப்பல் தாக்குதலுக்குப் பிறகு அரபிக் கடலில் போர் கப்பல்களை…

இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய மங்களுரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கும் வழியில், இந்தியாவின் மேற்குகடற்கரை பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி மும்பை துறைமுகத்துக்கு…

டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. 5 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லியில் காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், கடந்த 3 நாட்களாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. இன்றும் 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன.…

கடத்தல் சந்தேகத்தால் பிரான்ஸிலிருந்து மும்பை வந்தடைந்த பயணிகளிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள்…

பிரான்ஸில் கடந்த 4 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட பயணிகள் விமானம் இன்று (டிச.26) அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது. இந்நிலையில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பயணிகளிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தியர்கள் உள்பட 303 பயணிகளுடன் சென்ற…

இந்தியாவை நோக்கி வந்த 2 எண்ணெய் கப்பல் மீது ட்ரோன்கள்…

மத்திய ஆப்பிரிக்க நாடான கபோனிஸுக்கு சொந்தமான எம்.வி.சாய்பாபா என்ற கச்சா எண்ணெய் கப்பல் 25 இந்திய ஊழியர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. தெற்கு செங்கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அந்தக் கப்பல் மீது நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோல, நார்வே…

கோவிட் 19 புதிய மாறுபாடான ஜேஎன்.1 பாதிப்புக்கு கூடுதல் தடுப்பூசி…

கோவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஜேஎன்.1 தொற்றால் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வர மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி மாநில அரசுகள் தயாராக இருந்து வரும் நிலையில், இந்தியாவில் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிப் போட அறிவுறுத்தப்படவில்லை என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின்…

பிரதமர் மோடியின் ‘வெட் இன் இந்தியா’ – முதல் மாநிலமாக…

பிரதமர் மோடியின் ‘வெட் இன்இந்தியா (இந்தியாவில் திருமணம்)’ யோசனையை முதல் மாநிலமாக உத்தராகண்ட் அரசு அமல்படுத்துகிறது. உத்தராகண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், ‘தானா சேட்’ எனும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் குடும்ப திருமணங்களை வெளிநாடுகளில்…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு இடைநீக்கம் –…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் பல முறை தள்ளிப்போனது.…

இந்து கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: அமெரிக்கா கடும் கண்டனம்

கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றின் சுவரில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டது தொடர்பாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் சுவாமிநாராயண் கோயில் உள்ளது. அதில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ஸ்பிரே பெயிண்ட் மூலம் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு…

கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த 2 இந்திய போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் ரோந்து

கடந்த 14-ம் தேதி அரபிக் கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்தினர். 6 கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை கைப்பற்றியதாகவும் தங்களை காப்பாற்றக் கோரியும் சரக்கு கப்பலின் மாலுமி அவசர எச்சரிக்கையை அனுப்பினார். இந்த அவசர எச்சரிக்கை ஐரோப்பிய ஒன்றிய,…

சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு மதிப்புமிக்க லீஃப் எரிக்சன் லூனார்…

இந்தியாவின் வெற்றிகரமான சந்திரயான்-3 பயணத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) ஹுசாவிக் அருங்காட்சியகம் லீஃப் எரிக்சன் லூனார் பரிசை வழங்கியுள்ளது. ஐஸ்லாந்து அருங்காட்சியகத்தால் ஐஸ்லாந்து அருங்காட்சியகம் இஸ்ரோவின் அர்ப்பணிப்பு மற்றும் சந்திர ஆய்வுக்கான பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக ஐகானிக் நோர்ஸ் எக்ஸ்ப்ளோரரின் பெயரிடப்பட்ட மதிப்புமிக்க…

எரிமலையால் பாதிக்கப்பட்ட பபுவா நியூ கினியாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய…

 எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பபுவா நியூ கினியாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா நேற்று அனுப்பியது. தெற்கு பசிபிக் நாடான பபுவா நியூ கினியாவில் உள்ள ‘உலவுன்’ என்ற எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதி சீறி புகையை…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை:…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வி துறை அமைச்சர்…

இந்தியாவில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இருமல் மருந்தை அரசாங்கம் தடை…

இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கைக்குழந்தைகள் மற்றும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆண்டி-கோல்ட் காக்டெய்ல் மருந்து கலவையை தடை செய்துள்ளது, மேலும் அதற்கேற்ப மருந்துகளை லேபிளிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.…

மீண்டும் 3 இடைநீக்கம்: இடைநீக்க எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக…

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதற்கு பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3-ந் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர்…