தென் சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாடுவதை நிராகரிக்கும் அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பால் “சச்சரவு மேலும் மோசமடையலாம், மோதல்களும் நிகழலாம்” என அமெரிக்காவுக்கான சீனத் தூதர் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டனில் ஒரு கருத்தரங்கில் பேசிய சீனத் தூதர் சூய் தியான்கை , சீனாவைப் பொருத்தவரை பிரச்னைகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசித் தீர்த்துக்கொள்வதையே விரும்புகிறது என்றார்.
