கேஜெ: நான் 1மலேசியா அணி, 2020 தொலைநோக்கு அணி அல்ல

kjஅம்னோ  இளைஞர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  ஆதரவு  தெரிவித்ததை  அடுத்து  அதன்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  தாம்  ‘1மலேசியா  அணி’யின் ஒரு பகுதி  என்பதையும் ‘2020 தொலைநோக்கு அணி’யில்  தாம்  இல்லை  என்பதையும்  பெருமையாக  அறிவித்தார்.

‘1மலேசியா’ நஜிப் அடிக்கடி பயன்படுத்தும்  ஒரு  சுலோகம்.  ‘2020 தொலைநோக்கு’  மகாதிருடையது.

சைபர்ஜெயாவில்  மல்டிமீடியா  பல்கலைக்கழகக்  கருத்தரங்கம்  ஒன்றில்  கேட்கப்பட்ட  கேள்விக்குப்  பதிலளித்த  கைரி விவகாரங்களுக்கு  விளக்கம்  தேவை  மகாதிருக்குப்  பதிலளிக்க  வேண்டும்  என்று  கோரினாலும்கூட  தாம்  ஓர்  அமைச்சர்  என்பதை  நினைவுபடுத்தினார்.

இரண்டு  அணிகளையும்  சேர்ந்தவன்  என்பது  “பாதுகாப்பான பதிலாக”  இருக்கலாம்  ஆனால்  அது “விவேகமான பதிலாக”  இருக்காது  என்றார்.

“நான்  நிர்வாத்தைச்  சேர்ந்த  ஆள். கூட்டுப்பொறுப்பு  எனக்கும்  உண்டு. நான் பிரதமருடன் ஒத்துப்போகவில்லை  என்றால்  பதவி  விலக  வேண்டும். அவருக்கு  ஆதரவு  கொடுப்பதுபோல்  நடிக்கக்  கூடாது”, என்று  கைரி  கூறினார்.