OPS Selamat – 7 நாட்களுக்குள் 12,000 விபத்துக்கள்

சீனப் புத்தாண்டு முன் தொடங்கிய OPS Selamat 16/2020-ன் ஏழாவது நாளில் 17,901 வாகனங்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 11,788 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. OPS Selamat 16/2020 ஜனவரி 18-ல் தொடங்கியது. அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன (3,611 பதிவுகள்), ஜொகூர் (1,824 பதிவுகள்), கோலாலம்பூர்…

பிரதமர்: சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு இல்லை

சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு குறித்து மறுஆய்வு செய்ய எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கூறினார். நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 15 நாள் விசா விலக்கு அளிப்பதை மறுபரிசீலனை செய்ய புத்ராஜயாவுக்கு…

இந்திய சர்க்கரை இறக்குமதியை திடீரென அதிகரித்த மலேசியா

‘காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது இந்தியா' என்று பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்தையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் மலேசியாவுக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து வாங்கும் கச்சா சர்க்கரையின் அளவை திடீரென அதிகரித்துள்ளது மலேசியா.…

முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்துகிறது மலேசியா

கொரோனா வைரஸால் நாட்டில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் இன்று காலை அறிவித்தார். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.

RM1.1 மில்லியன் மதிப்புள்ள வனவிலங்கு உறுப்புகள் பறிமுதல்

சரவாக், மிரி நகரில் நேற்று ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் RM1.1 மில்லியன் மதிப்புள்ள வனவிலங்கு உறுப்புகள் மற்றும் அகர் கட்டைகள்/agarwood ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஒரு நபரையும் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். மிரி பொது செயல்பாட்டு படையின் 12 வது பட்டாலியனால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக புக்கிட்…

ஒராங் அஸ்லி சமூக மேம்பாட்டில் கவனம்

குலாசேகரன்: ஒதுக்கப்பட்ட ஒராங் அஸ்லி சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர மனிதவள அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மனித வள அமைச்சகம் மாற்றத்தை உண்டாக்குவதற்கும், ஒராங் அஸ்லி சமூகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. அதன் அமைச்சர் எம்.குலசேகரன், மலேசியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களைப் போலவே பழங்குடியினருக்கும் கல்வி, தொழில்பயிற்சிகல்வி மற்றும் வேலை…

கொரோனா வைரஸ்: ஜோகூர் பாரு ஹோட்டலில் எட்டு சீன நாட்டவர்கள்…

சிங்கப்பூரிலிருந்து நேற்று ஜோகூர் பாருவுக்கு வந்த எட்டு சீனர்கள், சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார். அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான வுஹானைச் சேர்ந்த 66 வயதான சீன நாட்டவரின் சக பயணிகள்…

கொரோனா வைரஸ்: சீனாவில் உள்ள மலேசியர்களுக்கு உதவ அவசரகால குழுக்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலேசியர்களுக்கு உதவ பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகமும், பணி குழுக்களும் அவசரகால உதவி குழுக்களை அமைத்து வருகின்றன. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, தூதரகத்தைத் தவிர, குவாங்சோ Guangzhou, குன்மிங்/Kunming, நானிங்/Nanning, ஷாங்காய்/Shanghai, ஜியான்/Xi’an மற்றும் ஹாங்காங்கில்/Hong Kong உள்ள தூதரக…

மறுமலர்ச்சி பெறுகிறது உத்துசன்

தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் (NUJ) உத்துசன் மறுமலர்ச்சியை உறுதிப்படுத்துகிறது, வேலைவாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. நாட்டின் மிகப் பழமையான மலாய் மொழி செய்தித்தாளான உத்துசன் மலேசியா, நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஆண்டு மூடப்பட்டது. ஆனால், இன்னும் சில மாதங்களில் அது மறுமலர்ச்சி பெற்று புதுப்பிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு…

உட்லேண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் பிரத்யேக சோதனை

சிங்கப்பூர், ஜனவரி 24 - இன்று மதியம் முதல் உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் (Woodlands and Tuas checkpoints) உடல்வெப்பநிலை பிரத்யேக சோதனை (temperature screening) செயல்படுத்தப்படும் என்பதை தரை வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியர்கள் கவத்தில் கொள்ள வேண்டும். குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள்…

கோலாலும்பூர் உயர்நீதிமன்றம் சோஸ்மா மீதான தீர்ப்பால் கட்டுப்பட்டது

இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், மற்றொரு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் கட்டுப்படுவதாகவும் ஒரு பயங்கரவாத குற்றம் சாட்அப்பட்டவரின் ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிக்கபட முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அஹ்மத் ஷாஹிர் மொஹமட் சல்லேஹ் இந்த தீர்ப்பை வழங்கினார். கடந்த வாரம், மற்றொரு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும்,…

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் குறித்து மேலும் விவரங்களைத் தருகிறது https://www.bbc.com/tamil மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் - சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா,…

கொரோனா வைரஸ் தாக்குதல் – சீனா, வுஹானுக்கு விமானங்களை நிறுத்தியது…

வுஹான் (Wuhan) நகரில் கொரோனா வைரஸ் (Corona virus) பரவியததைத் தொடர்ந்து பட்ஜெட் விமான நிறுவனங்களான ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ ஏர் ஆகியவை சீனாவின் வுஹானுக்கு விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. கோத்தா கினாபாலு, பாங்காக் மற்றும் ஃபூகெட் ஆகிய இடங்களிலிருந்து வுஹானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து…

பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் டோல் கட்டண குறைப்பு:…

பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) நெடுஞ்சாலைகளுக்கான 18 சதவீத டோல் கட்டணங்களுக்கான குறைப்பு பற்றிய விவரங்களை இன்று புத்ராஜெயா கோடிட்டுக் காட்டியது. நிதியமைச்சர் லிம் குவான் எங், இன்று ஒரு அறிக்கையில், டோல் கட்டணங்களுக்கான குறைப்பு பின்வரும் நெடுஞ்சாலைகளுக்கு பொருந்தும் என்றார்: North-South Expressway (NSE) வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை…

சீனப்புத்தாண்டு வாழ்த்து செய்தி – லிம் குவான் எங்

அமைச்சர் குரல் | ஜனநாயக அடிப்படையில் நடுநிலைத்தன்மை, சட்ட ஆட்சி, செயல்திறன் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவையே முன்னேற்றத்திற்கான வழி. இதுவே இனம், மதம், இடம், மக்கள்தொகை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களை மதித்து பாதுகாக்கின்ற ஒரு மலேசியாவை உருவாக்க உதவிகிறது. மலேசியர்கள் எல்லோரும் ஒரு தேசிய தன்மையோடு பிரச்சினைகளைப் பார்க்க…

சர்ச்சைக்குரிய பி.எஸ்.எஸ் அமலாக்கத்திட்டம் ரத்து

ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்தவிருந்த சர்ச்சைக்குரிய சபா தற்காலிக பாஸை (பிஎஸ்எஸ்) [Sabah Temporary Pass (PSS)] செயல்படுத்தும் முடிவு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. போர்னியோ போஸ்டில் ஒரு அறிக்கையின்படி, சபா முதலமைச்சர் ஷாஃபி அப்டால், பி.எஸ்.எஸ்ஸை ரத்து செய்வதற்கான முடிவு இன்று சபா அரசாங்க அமைச்சரவைக் கூட்டத்தில்…

ரி.மா.50,000 “போனஸ்”

கிளந்தான் மந்திரி பெசார் மற்றும் எக்கோகளுக்கு (Exco) தலா ஐம்பதாயிரம் 'போனஸ்' கிடைத்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) ஆடம்பர காரைப் பெறுவதோடு கிளந்தான் மந்திரி பெசார் அஹ்மட் யாகோப் மற்றும் அவரது நிர்வாக உறுப்பினர்கள் 13 பேரும் தலா ரி.மா. 50,000 "சிறப்பு ஒதுக்கீடு" பெற்றுள்ளனர். இது இந்த…

சீன புத்தாண்டு சிறப்பு டோல் கட்டண தள்ளுபடி!

சீன புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு இரண்டாவது பாலத்தில் 10 சதவீத சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. சீனப் புத்தாண்டில் பாலத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு சலுகையாக இரண்டாவது பாலம் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை ஜனவரி 25 நள்ளிரவு முதல் இரவு 11.59 மணி…

தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக பொதுவில் சண்டையிட வேண்டாம் – அன்வர்…

தலைமைத்துவ மாற்றம் பிரச்சனை தொடர்பாக பக்காத்தான் ஹராப்பன் தலைவர்கள் கருத்து வாக்குவாதம் செய்து வரும் நிலையில், இதுபோன்ற விவாதங்களை அமைதியாக கையாளுமாறு அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும், நாட்டை வழிநடத்தவும் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாக பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராகிம்…

பள்ளிக்குள் நுழைகிறது தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் (இ.சி) நாடு முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வாக்காளர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாக்களிக்கும் செயல்முறையின் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களை மூளைச்சலவை செய்வது ஆணையத்தின் நோக்கமில்லை என்றும் எந்தவிதமான அறிவுறுத்தலும் இருக்காது என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார்…

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துகள்!

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி ஐ.நா. இலக்குகளுக்கு ஏற்ப பொங்கலைக் கொண்டாடியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஓரளவு குறைத்துவிட்டது. இந்து பாரம்பரியத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கை முஸ்லிம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பினாங்கின் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி…

இடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்

சென்ற வார இறுதியில் நடைபெற்ற சபாவின் கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட மேலும் ஐந்து இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பனின் தோல்விக்கு அரசாங்கத் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று டி.ஏ.பி. சட்டமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார். ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு இல்லாதது மற்றும் அது ஒரு…