கோவிட் -19 இன் மொத்தம் 2,342 புதிய நேர்வுகள் பதிவு

கோவிட் -19 இன் மொத்தம் 2,342 புதிய நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது, மொத்தம் இப்போது 2,810,689 நேர்வுகளை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதிக்குப் பிறகு 271 நாட்களில் மிகக் குறைவான புதிய தொற்றுகள் இன்று பதிவாகியுள்ளன. கடந்த ஏழு…

4 நாட்களில் இரண்டு கைதிகளின் மரணம் குறித்து அரசு சாரா…

நான்கு நாட்களில் இருவர்  போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து மனித உரிமைகள் குழுக்கள் கவலை தெரிவித்தன. முதல் சம்பவம் ஜனவரி 13 அன்று தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைமையக லாக்-அப்பில் 63 வயதுடைய நபருடன் தொடர்புடையது, சமீபத்திய மரணம் ஜனவரி 16 அன்று பெங்கலன் செபா ( Pengkalan…

பிரதமர் இந்துக்களுக்கு தைப்பூச நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாளை தைப்பூசத்தை கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு தைப்பூச நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இவ்விழா ஆழ்ந்த அர்த்தத்துடனும், தனது அன்புக்குரிய குடும்பத்தினருடனும் கொண்டாடப்படும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார். “நாம், நம் குடும்பம் மற்றும் நமது…

ஜனவரி 19 முதல் ராவுப்பில் (Raub) உள்ள கம்போங் பத்து…

மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) ஜனவரி 19 முதல் பகாங்கில் உள்ள கம்போங் பத்து தாலம், முகிம் பத்து தாலம் ஆகிய இடங்களில் விதிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முகமட் சாட் (Rodzi Md…

நாடு மோசமாவதற்குக் காரணம் – ஊழலும் அரசியல்வாதிகளும் – சீலதாஸ்

மலேசியா ஒரு சிறந்த நாடாகத் திகழ அனைத்தும் இருந்தும் அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது இனவாத அரசியலும் அதன் பின்னணியில் இருக்கும் ஊழலும் ஆகும். நாளுக்கு நாள் நமது நாட்டின் தரத்தில் ஊழல் என்பது ஒரு வகையான ஏற்புடைய செயலாக மாறி வருவதையும் உணர முடிகிறது. இது…

சிறுவர்கள் இருவர் மாசாய் ஆற்றில் மூழ்கி பலியாகினர்

ஜொகூரில் உள்ள தாமன் மாசாய் உத்தாமாவிற்கு அருகிலுள்ள சுங்கை மாசாய் என்ற இடத்தில் நேற்று ஆறு  சிறுவர்கள் ஆற்றைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களில் இருவர் நீரில் மூழ்கி இறந்ததால் சோகமாக மாறியது. ஜொகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவித் துணைத் தலைவர் ஹம்தான் இஸ்மாயில்…

மலாயா புலிகள் மீது ஜிபிஎஸ் (டிராக்கர் காலரை) பயன்படுத்த அரசாங்கம்…

அழிந்து வரும் விலங்குகளைக் கண்காணிப்பதற்கு, நாடு முழுவதும் உள்ள சுமார் 150 மலாயாப் புலிகளுக்கு டிராக்கர் காலர்களை பயன் படுத்த எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சகம்,   முன்மொழிந்துள்ளது. (ஜிபிஎஸ்) செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிராக்கர் (ரேடியோ) காலரைப் பயன்படுத்துவதன் மூலம் விலங்கு வேறு பகுதிக்கு நகர்ந்ததா அல்லது…

ஜாஹிட்: அடிமட்ட மக்களே கட்சியின் இறுதி முடிவை எடுப்பவர்கள்

அம்னோவின் அடிமட்ட மக்களே கட்சியின் இறுதி முடிவெடுப்பவர்கள், அவர்களின் குரலை தலைமை பின்பற்றும் என்று கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) கூறினார். பாஸ் கட்சி  தலைவர் அப்துல் ஹாடி அவாங்குடன் இணந்த புகைப்படத்தை அவர் இன்று தந்து  அறிக்கையில் இணைத்திருந்தார். அதன் நோக்கம் விளக்கப்படவில்லை.…

சேமநிதி பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் – அம்னோ இளைஞர்…

கோவிட்-19 தொற்றுநோயால் மக்கள் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், சேமநிதி வைப்பு நிதியை (EPF) திரும்பப் பெறுவது அவசரத் தேவையாக கருதப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி (Asyraf Wajdi Dusuki) கூறினார். இது மக்களின் உயிர்வாழ்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று…

ஐந்து மாநிலங்களில் 85,134 டன் வெள்ளக் குப்பைகள் அகற்றப்பட்டன

பேரிடர் பாதித்த ஆறு மாநிலங்களில் நேற்று நிலவரப்படி மொத்தம் 85,134 டன் வெள்ளக் குப்பைகளும் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன. பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகியப்  பகுதிகளை உள்ளடக்கிய துப்புரவுப் பணிகள் 98 சதவீதத்தை எட்டியதாகவும், ஜோகூர் 90 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் குடியிருப்பு  மற்றும் ஊராட்சித்…

8 மாத குழந்தையை அறைந்த சந்தேகத்தின் பேரில் குழந்தை பராமரிப்பாளர்…

பண்டார் தாசிக் பெர்மைசூரி சேரஸில் உள்ள ஒரு வீட்டில் கடந்த புதன்கிழமை (ஜன.12) நடந்த சம்பவத்தில் எட்டு மாத ஆண் குழந்தையை அறைந்தசந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை துணைத் தலைவர் ஏசிபி கமருஜமான் எலியாஸ் (ACP Kamaruzaman Elias)…

ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதே…

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை, ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள தவறி விட்டனர் என்கிறார்  பொருளியல் நிபுணர் டரண்ட்ஸ் கோமஸ். இவர் இதற்கு முன்பு அந்த இலாகாவின் ஆலோசகர் மன்றத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தவராவார். அந்த ஆலோசகர் மன்றம் இதற்கு முன்பு  அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.…

அசாம் பாக்கியின் விசாரணையை பொது மக்கள் காண வாய்பளியுங்கள்- கோமஸ்…

வரும் திங்கட்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழுவின்  விசாரணையை நேரடியாக மக்கள் கண்காணிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு இலாகாவின் தலைமை இயக்குனராக இருக்கும் அசாம் பாக்கி அவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். “அவரின் விசாரணையில் முறையான கேள்விகள் கேட்கப்படுகின்றனவா,…

கோவிட்-19 (ஜனவரி 15): 3,074 நேர்வுகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சு இன்று 3,074 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிப்பவர்களின் எண்ணிக்கை பொதுவாக குறைந்து வருகிறது. 3,346 புதிய நேர்வுகள் பதிவான நேற்றைய (ஜனவரி 14) புள்ளிவிவரங்கள் பின்வருமாறு: சிலாங்கூர் (1,006) ஜோகூர் (380) கோலாலம்பூர் (280)…

ஆட்சேபனைகளை மீறி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட கிளினிக்கிற்கு எதிராக வழக்கு!

பத்து குழந்தைகளின் தாயும் வழக்கறிஞருமான அசியா அப்துல் ஜலீல்(Asiah Abdul Jalil), இன்று முன்னதாக தனது 13 வயது மகனுக்கு இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திய பாலோக் ஹெல்த்  கிளினிக்கின் (Balok Health) மருத்துவ ஊழியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளார். அசியா முன்பு சுகாதார…

பேராக் டிஏபி-க்கு விளக்கமளித்தார் டெரன்ஸ் நாயுடு!

வியாழன் அன்று பினாங்கில் இரவு நேரத்தில் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாசிர் பெடமர் (Pasir Bedamar) சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு (Terence Naidu) தனது நடத்தை குறித்து  விளக்கமளித்தார். அதோடு ஒரு போலிஸ் புகாரும் செய்துள்ளார். "நான் போதை பொருள் எதுவும் எடுக்கவில்லை, எனது சிறுநீரக சோதனை…

MyFutureJobs இல் காலியிடங்களை முதலாளிகள் கட்டாயம்  விளம்பரப்படுத்த வேண்டும்  –…

MYFutureJobs போர்ட்டலில் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினரால் நிரப்பப்படுவதற்கு முன், முதலில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய, வேலை வாய்ப்புகளை முதலாளிகள் விளம்பரப்படுத்துவது கட்டாயமாகும். மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன், கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தனது அமைச்சகத்தின் கீழ் இயங்கும் MYFutureJobs போர்ட்டலில் குறைந்தபட்சம் 30…

தைப்பிங் லாக்கப்பில் கைதிகள் இறந்த வழக்கில் 2 போலீசார் கைது…

நேற்று பேராக்கில் உள்ள தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) லாக்-அப்பில் கைதி ஒருவர் இறந்தது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் இரண்டு காவலர்களும் அடங்குவர். புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலைகள் இணங்குதல் துறையின் இயக்குநர் அஸ்ரி அஹ்மட் (Azri Ahmad) கூறுகையில்,…

‘பிணத்தை குளிப்பாட்டிய சம்பவம்’ சட்டம் தன் போக்கில் செயல்பட பொதுமக்களை…

திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கும் மசூதிகளின் நிர்வாகம் உட்பட பொதுமக்களின் நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமற்றவை என்று பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்), செனட்டர் இட்ரிஸ் அஹ்மத் (Idris Ahmad) கூறினார். எந்தவொரு காரணத்திற்காகவும் திருடுவது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், குற்றவாளிகள் நியாயமான முறையில் தீர்ப்பளிக்கப்பட…

போலி தடுப்பூசி சான்றிதழ் வழக்கில் மருத்துவர் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார்.

திரங்கானுவில் போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை விற்றதாகக் கூறி முன்பு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தனியார் கிளினிக் மருத்துவர் மீண்டும் மோசடி தொடர்பான விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணைக்காக 51 வயதுடைய நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாஜிஸ்திரேட்…

மலாக்காவில் உள்ள 35 பன்றிப் பண்ணைகள் ASF தொற்று பகுதிகளாக…

மலாக்கா அரசாங்கம், மஸ்ஜித் தனாவில்(Masjid Tanah) உள்ள பாயா மெங்குவாங்கில் (Paya Mengkuang)  உள்ள 35 பன்றிப் பண்ணைகளை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய் பரவல் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என அறிவித்துள்ளது. ASF இன் பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த அறிவித்தல் என்று முதல்வர் சுலைமான் எம்.டி…

நேற்று (ஜனவரி 12) கோவிட்-19 – மொத்தம் 15 பேர்…

இது வரையிலான மொத்த இறப்பு எண்ணிக்கை 31,738 ஆக உயர்ந்துள்ளது. பகாங்கில் அதிக புதிய இறப்புகள் 4  பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜோகூர் (2), கிளந்தான் (2), பேராக் (2), நெகிரி செம்பிலான் (1), சபா (1), சிலாங்கூர் (1), தெரெங்கானு (1) மற்றும் கோலா லம்பூர் (1).…

சுற்றுச்சூழல் குற்றவாளிகளை பொறுப்பாக்குங்கள் – நிபுணர்

நில பயன்பாட்டு நிலையில் கண்மூடித்தனமான மாற்றங்களைச் செய்வதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் மரம் வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இந்நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெர்டுபுஹான் பெலிந்துங் கஸானா ஆலம்(Pertubuhan Pelindung Khazanah Alam) மலேசியா (பீகா மலேசியா) தலைவர்…