பாஸ் கட்சி பிகேஆர் உடனான அரசியல் ரீதியிலான தனது ஒத்துழைப்பை துண்டித்துக் கொண்டதாக அறிவித்துள்ள நிலையிலும் இன்னும் இரு கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஒவ்வொரு கட்சிக்கும் தனக்கான ஈர்ப்பு ஆற்றலும் மக்கள் செல்வாக்கு கொண்டிருப்பதையும் எடுத்துரைத்த அவர் அதனை முறையே ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறினார்.
இது சாத்தியப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் திறந்த மனதுடன் கூடிப்பேசி முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.
இது தொடர்பாக தாம் பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங்குடன் பேச தயாராகவுள்ளதாக தெரிவித்தார். ஞாயமான பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு கட்சிகளுக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை கலைய முடியும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.