எண்ணெய் விலை குறைந்துள்ளதைப் பார்த்தீர்களா: எதிரணியைக் கலாய்க்கிறார் ரோஸ்மா உதவியாளர்

fuelமூன்றாவது   வாரமாக    எரிபொருள்  விலை   குறைந்துள்ளதை   வாய்ப்பாகப்  பயன்படுத்திக்   கொண்டு    எதிரணியை  வறுத்தெடுக்க    முடிவு    செய்துள்ளார்   ரிசால்    மன்சூர்.

எரிபொருள்   விலை  குறைவது,   அரசாங்கம்    எரிபொருள்  விலையில்   தில்லுமுள்ளு   செய்து    ஆதாயம்   காண  முயல்வதாக     எதிரணியினர்   குற்றஞ்சாட்டி   வந்தது  பொய்யென்பதைக்   காண்பிப்பதாக  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கின்   துணைவியார்    ரோஸ்மா   மன்சூரின்   உதவியாளர்   கூறினார்.

“எதிரணியினர்   சுமத்திய   குற்றச்சாட்டுகளுக்காக    அரசாங்கத்திடம்   மன்னிப்பு   கேட்டுக்கொள்வதுடன்   இனிமேலும்  அரசாங்கத்தின்  மேன்மையான    செயல்களைப்  பழித்துரைக்கக்  கூடாது”,  என   ரிசால்  மன்சூர்   ஓர்   அறிக்கையில்   கூறினார்.