இசா சமட் ரிம3 மில்லியனுக்குமேல் கையூட்டு பெற்றார்- அரசுத் தரப்பு

இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் அம்னோ அரசியல்வாதி முகம்மட் இசா சமட் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஃபெல்டா முதலீட்டுக் கழகம்(எஃப்ஐசி) கூச்சிங்கில் ஆடம்பர தங்குவிடுதி ஒன்றை வாங்குவதற்கு ஒப்புதல் கொடுத்ததற்காக ஃபெல்டா முன்னாள் தலைவர் இசா சமட்டுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மெர்டேகா பேலஸ் ஹோட்டலின் முன்னாள் உரிமையாளரான ககாசான் அபாடி புரப்படிஸ் சென். பெர்ஹாட் இயக்குனர் இக்வான் சைடெலிடமிருந்து ரிம3 மில்லியனுக்குமேல் கையூட்டு பெற்றதற்கு ஆதாரங்கங்கள் முன்வைக்கப்படும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் அஃப்சானிஜாம் அப்துல் அசீஸ் கூறினார்.

”இக்வான் குற்றவாளிக்கு(முகம்மட் இசாவுக்கு) ரிம500,000, ரிம 500,000, ரிம300,000, ரிம500,000, ரிம500,000 என முகம்மட் ஜாஹிட் மூலம் கொடுத்திருக்கிறார்”, என்றாரவர்.