சாமிவேலுவுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் பெண் மாத அலவன்ஸ் ரிம25ஆயிரம் கோரி வழக்கு

இ. மரியம் ரோசலின் தடையின்றி சாமிவேலுவை சந்திக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மஇகா முன்னாள் தலைவர் சாமிவேலுவுடன் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறிகொள்ளும் அப்பெண், அவரது முதன்மை வழக்கின் முடிவு இன்னும் தெரியாத நிலையில் மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்த 25,000 ரிங்கிட் பராமரிப்புத் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக ஃப்ரி மலேசியா டுடே அறிவித்துள்ளது.

சாமிவேலுவின் நிதி விவகாரங்களை அவரின் மகன் வேள்பாரி தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட பிறகு தனக்குக் கொடுக்கப்பட்டு வந்த மாதாந்திர பராமரிப்புத் தொகை 2017-இலிருந்து கொடுக்கப்படுவதில்லை என்றவர் குறிப்பிட்டுள்ளார்.

மரியம் முதன்மை வழக்கு என்று குறிப்பிட்டது அவர் ரிம20 மில்லியன் இழப்பீடு கேட்டு சாமிவேலுவுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்காகும்.