நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை டி.ஏ.பி. தலைவர்கள் வழங்குவதில்லை

ஜூன் 2021க்குள் நடைபெறவிருக்கும் அடுத்த சரவாக் மாநிலத் தேர்தல் டி.ஏ.பி.க்கு ஒரு சவாலாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

“பக்காத்தான் ஹரப்பன் அரசாங்கம் தங்களைக் கவனித்துக்கொள்வதாகவும், அவர்கள் நாட்டின் முன்னேற்றதலும் வளர்ச்சியிலும் ஒரு பகுதியாக இருப்பதாக அவர்கள் நம்பவேண்டும். சரவாகியர்களுக்கு தேவையான வளர்ச்சியை நாம் முறையே கொண்டு செல்ல வேண்டும்” என்று அவர் சமீபத்தில் போர்னியோ போஸ்டின் ஓரியண்டல் டெய்லிக்கு அளித்த பேட்டியில் கூறினார் .

ஒருங்கிணைந்த பரீட்சை சான்றிதழை (யு.இ.சி)/Unified Examination Certificate (UEC) அங்கீகரிப்பது குறித்த ஹராபனின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லையே என்பது குறித்து கேட்டபோது, வாக்குறுதிகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
விளம்பரம்

“டிஏபி தலைவர்கள் ஒருபோதும் அவர்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதில்லை. இப்போது நாம் நாட்டின் நிதிப் பிரச்சினைகள் மற்றும் முன்னாள் நிர்வாகத்தால் எஞ்சியிருக்கும் பெரும் கடன் பிரச்சனைகளை கையாண்டு கொண்டிருக்கிறோம்.

“ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் என்று வரும்போது, அதை நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்று அவர் கூறினார்.

“ஹரப்பன் அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தை விட கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.