கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 425 -ஆக உயர்ந்தது

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை முடிவில் 425-ஆக உயர்ந்தது. முந்தைய நாளிலிருந்து 64 அதிகரித்துள்ளது என்று நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

புதிய இறப்புகளில், அனைத்தும் வைரஸ் பாதிப்பின் மையமான மத்திய ஹூபே மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன. மாகாண தலைநகர் வுஹானில் 48 பேர் இறந்துள்ளனர்.

சீனா முழுவதும், திங்களன்று 3,235 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது இதுவரை மொத்த எண்ணிக்கையை 20,438 ஆக உயர்த்தியுள்ளது.