மலேசிய பாமாயிலை மீட்க பாகிஸ்தான் உறுதி

இந்தியாவின் ‘அச்சுறுத்தலுக்கு’ பின்னர், மலேசிய பாமாயிலை மீட்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

இந்திய சந்தையில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மலேசிய பாமாயிலை வாங்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அதன் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினையில் தனது உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, இந்தியா மலேசியாவை எவ்வாறு “அச்சுறுத்தியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, மலேசியாவுக்கு இரண்டு நாள் பணி நிமித்த பயணத்தில் மலேசியா வந்திருக்கும் இம்ரானுடன் பாமாயில் பிரச்சினையை பற்றி பேசியதாக மகாதீர் கூறினார்.

“நாங்கள் பாமாயில் விற்பனையைப் பற்றி பேசினோம். மலேசியாவிலிருந்து அதிக பாமாயிலை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா பொதுச் சபையில் தனது உரையின் போது ஜம்மு-காஷ்மீர் மோதல் குறித்து மகாதீர் கூறிய விமர்சனங்களுக்கு இந்தியா அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்தது.

“ஜம்மு-காஷ்மீர் தொடர்பான ஐ.நா. தீர்மானம் இருந்தபோதிலும், அந்த நாடு படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணங்கள் இருந்தாலும், அது தவறான ஒன்று தான். இந்த பிரச்சினை அமைதியான வழிமுறைகளால் தீர்க்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஐ.நா.வை புறக்கணிப்பது, ஐ.நாவையும் சட்டத்தின் ஆட்சியையும் புறக்கணிக்க வழிவகுக்கும்” என்று இம்ரான் கூறினார்.

மகாதீர் பாகிஸ்தானுக்கோ அல்லது இந்தியாவுக்கோ ஆதரவாக இருக்கவில்லை என்றாலும், அவரது பேச்சு இந்தியாவை விமர்சிப்பதாகக் கருதப்பட்டது.

தற்போது, ஜம்மு-காஷ்மீரின் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளது, பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

உலகின் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடான இந்தியா, மலேசியாவிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடைகளை விதித்ததுடன், மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதியையும் நிறுத்துமாறு மறைமுக முறையில் வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டது. இது மலேசியாவின் செம்பனை ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பரில், மகாதீர் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்தபோது மீண்டும் இந்தியாவை விமர்சிப்பதாகக் கருதப்பட்டது.

இந்தியா போன்ற ஒரு மதச்சார்பற்ற அரசு முஸ்லிம்களின் குடியுரிமையை பறிப்பதைக் கண்டு வருத்தப்படுவதாக மகாதீர் கூறினார்.

“இந்தச் சட்டத்தின் காரணமாக ஏற்கனவே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். 70 ஆண்டுகளாக, அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் குடிமக்களாக ஒன்றாக வாழ்ந்திருக்கும்போது, ஏன் இந்த காரியத்தை செய்ய வேண்டும்? அதை போல நாங்கள் இங்கே செய்தால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். கலவரம், பாதுகாபின்மை என்று எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய அரசு பின்னர் மகாதீர் தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“இந்த செயல் இந்தியாவின் எந்தவொரு குடிமகனின் அந்தஸ்தையும் எந்த வகையிலும் பாதிக்காது அல்லது எந்தவொரு இந்தியருக்கும் தனது குடியுரிமையில் எந்த நம்பிக்கையையும் இழக்காது. எனவே, மலேசியாவின் பிரதமரின் கருத்து உண்மையில் தவறானது. குறிப்பாக உண்மைகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு மலேசியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.