அன்வாருக்கும் எனக்கும் இடையில் ‘குத்துச்சண்டை’ சாத்தியம் இல்லை – பிரதமர் மகாதீர்

பிரதமர் மகாதீர் – அன்வாருக்கும் எனக்கும் இடையில் ‘குத்துச்சண்டை’ சாத்தியம் இல்லை

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று, மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி பயணிக்கும் சாலையை தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது, அவர்களின் சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு ஊடகங்களை குறை கூறும் வழக்கத்தை கடைபிடித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, அவருக்கும் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையிலான அரசியல் திட்டத்தைச் சுற்றியுள்ள நாடகத்திற்கு பத்திரிக்கை ஊடகங்கள் தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் பல கேள்விகளை எழுப்பியபோது “இந்த பத்திரிக்கைகள் தான்,” என்று அவர் பதிலளித்தார்.

“இதில் பத்திரிக்கைகள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றன. எனவே சர்ச்சைகள் இல்லாதபோதும் கதைகள் நிறையவே உள்ளன,” என்று அவர் இன்று லங்காவியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தனக்கும் அன்வாருக்கும் இடையில் ஒரு வாக்குவாதத்தை ஏற்படுத்த ஊடகங்கள் தயாராகி வருவதாகவும் பிரதமர் கூறினார்.

“எனவே பத்திரிக்கைகளைப் பொறுத்தவரை, அன்வாருக்கும் எனக்கும் இடையில் ‘குத்துச்சண்டை’ சாத்தியம் என எதிர்ப்பார்கிறார்கள். எல்லோரும் ‘குத்திக்கொண்டால்” கதைகளைச் சொல்வது ஊடகங்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும் அல்லவா,” என்று அவர் மேலும் கூறினார்.

மகாதீர் மற்றும் அன்வார் இடையே வரவிருக்கும் மோதல் குறித்த பல்வேறு ஊக அறிக்கைகளை மகாதீர் குறிப்பிடுகிறார், இது அவர்களின் 1998 வீழ்ச்சியைப் போன்றது.

அடுத்த வெள்ளிக்கிழமை பக்காத்தான் ஹராப்பன் தலைமைக் குழு கூட்டத்தில் வெடிக்கும் விவகாரங்கள் குறித்து நேற்று பல ஊடகங்களை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திகளை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

மகாதீர் தனது பதவிக் காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்க Gabungan Parti Sarawak உட்பட 130க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தின் போது பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமானால் மகாதீர் இதை தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தலாம் என்று கூறப்படிகிறது.

இதற்கிடையில், மகாதீரை அதிகாரத்தில் வைத்திருக்க ஒரு “தந்திரமான சதித்திட்டம்” தீட்டப்படுவதாக அன்வார் நேற்று உறுதிப்படுத்தினார், ஆனால் பிரதமர் மகாதீர் இதில் ஈடுபடவில்லை என்றும் கூறினார்.

1981 முதல் 2003 வரை அவர் பிரதமராக இருந்த முதல் பதவியைப் போலவே, இன்னும் 22 ஆண்டுகள் அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள் என்று கூறிய மகாதீர், நவம்பரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டிற்குப் பிறகு விலகுவதாகக் கூறினார்.