‘#MusaadahCovid19’ நிதி, முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல

‘#MusaadahCovid19’ நிதி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல

பிரதம மந்திரி துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் அல்-பக்ரி இன்று தொடங்கப்பட்ட ‘#MusaadahCovid19’ நிதி முஸ்லிம்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

தனது ட்விட்டர் பதிவில், அந்த இஸ்லாமிய விவகாரத் துறையின் (ஜாகிம்) நிதி முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று ஒரு செய்தி போர்ட்டல் குறிப்பிட்டுள்ளது போல தான் ஒரு போதும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“நான் ஒருபோதும் ‘#MusaadahCovid19’ நிதியத்தை முஸ்லிம்களுக்காக மட்டுமே என்று குறிப்பிடவில்லை”.

“நான் பலமுறை வலியுறுத்தியுள்ளது போல இந்த நிதி, முன்னணியில் பணியில் இருப்பவர்கள் உட்பட, தேவைப்படுவர்களுக்காக உள்ளது இந்த நிதி” என்று புல்கராஜியாவில் நிதியைத் தொடங்கிய பின்னர் அவர் கூறினார்.

ஏழைகளுக்குத் தவிர, மதம் மற்றும் இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வீடற்ற மக்கள், முன்னணி தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு RM20 மில்லியனுக்கும் அதிகமான தொகையை தனது அமைச்சின் கீழ் நன்கொடையாக வழங்கியதாக அவர் கூறினார்.

“ஆறு ஆண்டுகளாக ஒரு அரசு ஊழியராக எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்காத எந்தவொரு அறிக்கையையும் குறிப்பாக மத மற்றும் இன உறவுகள் தொடர்பான பிரச்சினைகளை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன், ” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, டாக்டர் சுல்கிப்லி, அந்த அறிக்கையை சரி செய்து மன்னிப்பு கேட்குமாறு அப்போர்ட்டலைக் கேட்டுக் கொண்டார்.

புதிதாக தொடங்கப்பட்ட நிதி, கோவிட்-19 பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுக் ஆணையின் போது கடமையில் இருக்கும் ஜாக்கிம் அதிகாரிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று சுல்கிப்லி கூறினார்.

கோவிட்-19 நோயால் இறந்தவர்களை கையாளும் குழு, பிணவண்டி ஓட்டுனர்கள் மற்றும் கல்லறை வெட்டுபவர்கள் போன்ற தொற்றுநோய்க்கு நேரடியாக பணியாற்றுவர்கள் என அடையாளம் காணப்பட்ட குழுக்களும் உதவி பெறுவார்கள் என்று அவர் கூறினார்.