முகிதீன் மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்கிறது பாஸ்

ஜூலை 13 முதல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்க, பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவாக பாஸ் நம்பிக்கை தீர்மனத்தை சமர்ப்பித்துள்ளது என்று அதன் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்தார்.

மார்ச் மாதம் தொடங்கி, நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தி, மக்கள் மீது தலைமைத்துவத்தையும் அக்கறையையும் காட்டிய முகிதீனிக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்த இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார் தக்கியுதீன் ஹசான்.

“பிரதமரின் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவைக்காக அனைத்து இன மக்களின் ஆதரவையும், மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளின் ஆதரவையும் தொடர்ந்து பெறுவார் என்று பாஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.”

“நாட்டின் பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து பொருளாதார மீட்சி திட்டமும், ஊக்கப் பொதிகளும் நன்கு வரவேற்கப்பட்டுள்ளன” என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த முன்மொழிவு தாக்கல் செய்யப்படும்போது பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் என்று பாஸ் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் தக்கியுதீன் கருத்துரைத்தார்.