ரோன்95, ரோன்97 இரண்டு காசுகளும், டீசல் ஏழு காசுகளும் ஏற்றம்

ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு இரண்டு சென்னும், டீசலின் விலை லிட்டருக்கு ஏழு சென்னும் உயர்ந்துள்ளது. இது இன்று நள்ளிரவு தொடங்கம், அடுத்த ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும்.

பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில், ரோன் 95-க்கான புதிய விலை லிட்டருக்கு RM1.64, ரோன்97 லிட்டருக்கு RM1.94 மற்றும் டீசல் RM1.81 ஆக நிர்ணயிக்கப்படுகிறது என நிதி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைத் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்று அறிவித்துள்ளது.