கடுமையான எஸ்ஓபி-க்களுடன், எஸ்பிஎம் மாணவர்கள் பள்ளி செல்லலாம்

இந்த ஆண்டு, எஸ்.பி.எம். தேர்வுக்கு அமரவிருக்கும் அனைத்து மாணவர்களும், பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்படும் மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள் உட்பட.

செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) விதிக்கப்படும் என்றும், அதனை மலேசியக் கல்வி அமைச்சு அறிவிக்கும் என்றும் பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்.

“கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், குறிப்பாக பி.கே.பி. விதிக்கப்பட்ட மாநிலங்களில், 2020 மற்றும் 2021-ம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு உள்ளிட்ட பிற முக்கியத் தேர்வுகளில் அமரவுள்ள மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

“அவர்கள் கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு, இந்த எஸ்.ஓ.பி.க்களை விவரிக்கும்,” என்று அவர் இன்று நேரடி ஒளிபரப்பான ஒரு சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.

முன்னதாக, பிப்ரவரி மாதம் எஸ்.பி.எம். தேர்வுக்கு அமரத் திட்டமிடப்பட்டுள்ள 2020-ஆம் ஆண்டு ஐந்தாம் படிவ மாணவர்கள், ஜனவரி 20-ஆம் தேதி பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கல்வி துணை அமைச்சர் I முஸ்லீம் யஹாயா தெரிவித்திருந்தார்.