கோவிட் 19 : இன்று 3,309 புதிய நேர்வுகள், 4 மரணங்கள்

நாட்டில் இன்று, 3,309 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

1,469 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 83 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,007), ஜொகூர் (442), சபா (409), கோலாலம்பூர் (326), பினாங்கு (317), பேராக் (241), சரவாக் (146), பஹாங் (96), கிளந்தான் (86), நெகிரி செம்பிலான் (85), கெடா (62), புத்ராஜெயா (36), மலாக்கா (21), திரெங்கானு (20), லாபுவான் (15).

இன்று, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் இருவர், பேராக், தைப்பிங் மருத்துவமனையில் ஒருவர், இராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் ஒருவர் என நால்வர் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆக, இதுவரை நாட்டில் 559 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

கோலாலம்பூர் (4) – டியலிசிஸ் பத்து திரளை, ஐரிஸ் திரளை, உடாராமா திரளை, ஜாலான் கியாரா திரளை; சிலாங்கூர் (3) – கம்போங் பாடாக் திரளை, ஜாலான் மானான் திரளை, பெர்சியாரான் குவாலா திரளை; கிளந்தான் (1) – தாமான் கெசெடார் திரளை; புத்ராஜெயா (1) – டியலிசிஸ் புத்ரா திரளை; திரெங்கானு (1) – பெர்மின்ட் ஹர்மோனி திரளை; சரவாக் (1) – புக்கிட் செகுபோங் திரளை.