இன்று 3,631 புதிய நேர்வுகள், 18 மரணங்கள், அவசரப் பிரிவில் 251 நோயாளிகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,631 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இன்று 18 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத தினசரி மரண எண்ணிக்கை என்றும் அவர் கூறினார்.

“இன்று சிலாங்கூரிலிருந்து ஒன்பது மரணங்களும், சபாவில் மூன்று மரணங்களும், கோலாலம்பூரின் மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மரணங்களும், சரவாக்கில் இரண்டு மரணங்களும், ஜொகூர் மற்றும் பினாங்கில் தலா ஒரு மரணமும் பதிவாகியுள்ளன,” என்று அவர் சொன்னார்.

இவர்களில் 17 பேர் மலேசியர்கள், ஒருவர் வெளிநாட்டுக்காரர்.

கிள்ளான் பள்ளத்தாக்கு (34.6 விழுக்காடு), ஜொகூர் (12.83 விழுக்காடு), சபா (12.48 விழுக்காடு) என அதிக எண்ணிக்கையிலானப் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

2,554 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 102 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (782), ஜொகூர் (466), சபா (453), கோலாலம்பூர் (435), சரவாக் (229), பினாங்கு (202), நெகிரி செம்பிலான் (197), திரெங்கானு (178), கெடா (166), கிளந்தான் (161), பேராக் (138), மலாக்கா (82), பஹாங் (61), புத்ராஜெயா (39), லாபுவான் (29), பெர்லிஸ் (13).

மேலும் இன்று 12 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

ஜொகூர் (5) – ஜாலான் பெர்வீரா பணியிடத் திரளை (ஜொகூர் பாரு), ஜாலான் இண்டா கெமிலாங் பணியிடத் திரளை (ஜொகூர் பாரு & கோத்த திங்கி), ஜாலான் ஸ்கூடாய் (ஜொகூர் பாரு), தெம்போக் ரெங்கம் தடுப்பு மையத் திரளை (குளுவாங்), செலாசே பெரிண்டு பணியிடத் திரளை (கூலாய்); பஹாங் (2) – தஞ்சோங் லும்பூர் திரளை (குவாந்தான்), கம்போங் பாயா சிப்புட் பணியிடத் திரளை (தெமெர்லோ) ;  மலாக்கா (1) – செர்காம் தெங்கா திரளை (ஜாசின், அலோர் காஜா & மலாக்கா தெங்கா), சிலாங்கூர் (1) – ஜாலான் சுங்கை சண்டோங் பணியிடத் திரளை (கிள்ளான்); லாபுவான் (1) – ஜாலான் கினாபெனுவா பணியிடத் திரளை (லாபுவான்); சபா (1) – ஜாலான் டேச ஜெரொக்கோ திரளை (கினாபாத்தாங்கான்); புத்ராஜெயா & சிலாங்கூர் (1) – புத்ரா தூஜோ திரளை (புத்ராஜெயா & சிலாங்கூர்).