பி.என். அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் ஜிஇ15-ஐ சேர்ந்து எதிர்கொள்ளும் – முஹைதீன் நம்பிக்கை

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை உருவாக்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், அடுத்தப் பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்வதில் தொடர்ந்து ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பெர்சத்து தலைவரான அவர், எதிர் நிலைப்பாட்டை முடிவு செய்வது அந்தந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பம் என்றார்.

“தற்போதுள்ள கட்சிகளின் கூட்டணி தொடர்ந்து அழியாமல் இருப்பதைக் காண விரும்புகிறேன், அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் மக்களும் அதையே விரும்புகிறார்கள்.

“எதுவாக இருந்தாலும், நான் அதை மற்றக் கட்சி தலைவர்களிடம் விட்டு விடுகிறேன், ஆனால் தேசியக் கூட்டணியின் நிலைமை இன்னும் வலுவாகவே உள்ளது,” என்று அவர் பெர்லிஸ், கங்காரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் பெர்சத்துவுடன் அம்னோ ஒத்துழைக்காது என்று கூறி, அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி எழுதியக் கடிதத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பெர்சத்து உச்சநீதிமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசியதாகவும், கட்சியின் நிலைப்பாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை தலைமைச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் வெளியிட்டுள்ளதாகவும் முஹைதீன் தெரிவித்தார்.

பாஸ் தலைமையுடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டதாகவும், தேசியக் கூட்டணியில் இருக்க, அக்கட்சி தனது வலுவான நிலைப்பாட்டைக் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் திட்டமிட்டுள்ளோம், அடுத்தத் தேர்தலுக்காக கவனம் செலுத்தி, கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா