பிரதமர் அலுவலகம் : கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘மஹியாடின்’ எனக் குறிப்பிடவும்

கடிதப் போக்குவரத்து மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களில், பிரதமர் முஹைதீன் யாசினின் அதிகாரப்பூர்வப் பெயரைப் பயன்படுத்த வேண்டுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டையில் தோன்றுவது போல, முஹைதீனின் அதிகாரப்பூர்வப் பெயர் அல்லது உண்மையான பெயர் மஹியாடின் எம்.டி. யாசின் (Mahiaddin Md Yasin) ஆகும்.

3 ஜூன் 2021 தேதியிட்டு, பிரதமர் அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனத்திற்கும் அனுப்பப்பட்ட அக்குறிப்பில், முஹைதீனின் அந்தரங்கத் தலைமைச் செயலாளர் மர்சுகி மொஹமட் கையெழுத்திட்டுள்ளார்.

“சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் கருத்துக்களைப் பின்பற்றி, பிரதமரின் அதிகாரப்பூர்வப் பெயரைப் பின்வருமாறு பயன்படுத்த வேண்டும் : மஹியாடின் பின் எம்.டி யாசின் (Mahiaddin bin Md Yasin) அல்லது டான் ஸ்ரீ டத்தோ ‘ஹாஜி மஹியாதீன் பின் ஹாஜி எம்.டி யாசின் (Tan Sri Dato’ Haji Mahiaddin bin Haji Md Yasin).

“இது சம்பந்தமாக, பிரதமரின் பெயர் மற்றும் கையொப்பம் தேவைப்படும் அனைத்து கடித மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களும் மேலே குறிப்பிட்டபடி பிரதமரின் அதிகாரப்பூர்வப் பெயரைப் பயன்படுத்த வேண்டும்.

அந்தக் குறிப்பின்படி, “இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது”.

மர்ஸுகி அந்தக் குறிப்பின் தகவலை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

ஏப்ரல் 2-ம் தேதி, ஷா ஆலம் உயர்நீதிமன்றம், அடையாள அட்டையில் உள்ளதைப் போல பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதால், முஹிதீன் கையெழுத்திட்ட தடுப்பு உத்தரவு ஒன்றை இரத்து செய்தது.

இருப்பினும், நான்கு அவசரகாலப் பிரகடனங்களிலும் முஹைதீன் தனது உண்மையான பெயரையேப் பயன்படுத்தி உள்ளார்.