செர்டாங் மருத்துவமனையின் உண்மை நிலை அறிய சட்டமன்ற உறுப்பினர் விரும்பம்

சிலாங்கூர், செர்டாங் மருத்துவமனையின் உண்மையான நிலைமையை உறுதிப்படுத்துமாறு ஶ்ரீ கெம்பங்கான் சட்டமன்ற உறுப்பினர் ஈன் யோங் ஹியான் வா அரசாங்கத்திடம் கேட்டுகொண்டார்.

சூடான மற்றும் வசதியற்ற கூடாரங்களில் தங்க வைக்கப்படுவதோடு, தரையில் தூங்கும் நோயாளிகளின் படங்கள் வீடியோ மூலம் பரவியதை அடுத்து, பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

“24 மணி நேரத்திற்கும் மேலாக, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

“இதுவரை, தேசியக் கூட்டணி அரசாங்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தப் பிரச்சினைக்குப் பதிலளிக்கவும் தீர்வு காணவும் இல்லை,” என்று அவர் கூறினார்.

செர்டாங் மருத்துவமனை மற்றும் சுகாதார அமைச்சைத் தொடர்பு கொண்ட மலேசியாகினி, இன்னும் அவர்களின் விளக்கத்திற்காகக் காத்திருக்கிறது.

கோவிட் -19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு உதவ, கூடுதல் உதவி திரட்டப்படும் என்று இம்மாதத் தொடக்கத்தில் அமைச்சு அறிவித்தது.

இந்த உதவிகள், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 6,500 சுகாதாரப் பணியாளர்களைப் பயன்படுத்துவது, மருத்துவமனைக்குத் தேவைவான பொருள்கள் வாங்குவது மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பணிபுரிவது போன்றவையும் அடங்கும்.