மலேசியப் பெரியவர்களில் 94 விழுக்காட்டினருக்கு முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

மலேசியாவில், 21,993,417 பேர் அல்லது நேற்று இரவு 11.59 வரையில், 94 விழுக்காடு பெரியவர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நவ் வலைதளத்தில் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், பெரியவர்களில் 97.3 விழுக்காட்டினர் அல்லது 22,756,938 பேர் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று, கடந்த ஆண்டு பிப்ரவரி 24 முதல் தொடங்கப்பட்ட தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத் (பிக்) தடுப்பூசியின் ஒட்டுமொத்த 207,541 மருந்தளவு, பெரியவர்கள் மற்றும் இளையர்கள் என மொத்த மருந்தளவு தடுப்பூசியை 48,046,427 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இலக்குக் குழுவினருக்கு 9,139 ஊட்ட மருந்தளவு நேற்று வழங்கப்பட்டது, தற்போது கொடுக்கப்பட்ட மொத்த ஊட்ட மருந்தளவு 30,756-ஆக உள்ளது.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளையர்களுக்கு, நேற்றைய நிலவரப்படி, 940,960 தனிநபர்கள் அல்லது 29.9 விழுக்காட்டினர் தடுப்பூசியை முடித்துள்ளனர், அதே நேரத்தில் 2,483,693 தனிநபர்கள் அல்லது 78.9 விழுக்காட்டினர் கடந்த செப்டம்பர் 8-இல் தொடங்கிய அக்குழுவினர் பிக் மூலம் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றனர்.

  • பெர்னாமா