இங்கிலாந்து நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்த திட்டம்

உலகம் முழுவதும் தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைகோள்களும் ஏவப்படுகின்றன. 36 செயற்கைகோள்களும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.

இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளன. வணிக நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இந்த செயற்கைகோள்களை அதிக எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி.-எம்.கே3 ராக்கெட் மூலம் செலுத்துகிறது.

இதற்காக ஒன் வெப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைகோள்களும் ஏவப்படுகின்றன. இதற்கிடையே 36 செயற்கைகோள்களும் நேற்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. வழக்கமான பரிசோதனைகளை முடித்த பிறகு அவற்றை ஏவும் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

36 செயற்கைகோள்களை செலுத்துவது தங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இருக்கும் என்று நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் கூறியுள்ளது.

 

-mm