மசீச-வும் தொகுதிகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறது

அடுத்த பொதுத் தேர்தலில்  பிஎன் உறுப்புக் கட்சிகள் தொகுதிகளை மாற்றிக் கொள்ளும் வியூகம் பிஎன் வெற்றியை உறுதி செய்யுமானால் அந்த யோசனையை மசீச திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும்.

இவ்வாறு அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். பிஎன் உறுப்புக் கட்சிகள் அதிக இடங்களை வெல்வது அந்த யோசனையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

“அந்த இடத்தை இன்னொரு உறுப்புக் கட்சி வெற்றி பெற இயலும் நாம் நம்பினால் தொகுதிகளை மாற்றிக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

“பிஎன் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்னும் பெரிய தோற்றத்தை நாங்கள் பார்ப்பதால்  அந்த யோசனையை ஆதரிப்போம்”, என அவர் கோலாலம்பூரில்  விஸ்மா மசீச-வில் நிருபர்களிடம் கூறினா.

மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் தொகுதிகளை மாற்றிக் கொள்ள மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஜி பழனிவேல் விடுத்துள்ள அறிக்கை பற்றிக் கருத்துக் கூறுமாறு டாக்டர் சுவா கேட்டுக் கொள்ளப்பட்டார்.

மசீச தலைவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் பொருட்டு அடி நிலைத் தலைவர்களுக்கு விளக்கக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெர்னாமா