பள்ளி மாணவிகளின் ஆபாசப் படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கியதாக, படிவம் 5 மாணவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில், 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து பள்ளி மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஆகஸ்ட் மாதத்தில் காவல்நிலையத்தில்  புகார் அளித்ததாக மாநிலக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது கூறுகையில், அந்த ஐந்தாம் படிவ மாணவர் பள்ளியினால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலம், சிரம்பான் பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் ஆபாசப் படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைத்து பரப்பிய சம்பவத்தில், ஐந்தாம் படிவத்தில் (Form Five) பயிலும் மாணவர் ஒருவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெர்னாமா செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, அந்த மாணவர் மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 24 முதல் 28ஆம் தேதி வரை வகுப்புகளுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

14 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அச்சம்பவம் தொடர்பாக அப்போது காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறினார். மேலும், ஐந்து சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை ஆவணங்கள் விரைவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக துணைப் பொது வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.