வகுப்பறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்தார்.

செப்பாங் காவல் துறைத் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமன், இந்தச் சம்பவம் தொடர்பான புகார் நேற்று மாலை 7.30 மணிக்கு கிடைத்ததாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரண வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக செபாங் காவல் துறைத் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.

நேற்று டெங்கில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏழு வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 7.30 மணியளவில் காவல்துறைக்கு புகார் கிடைத்ததாக செபாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட மாணவருக்கு வகுப்பறையில் இருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது,” என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி அறிக்கையில் தெரிவித்தார்.

நோர்ஹிசாம் மேலும் கூறுகையில், இன்று காலை 8 மணியளவில் புத்ராஜெயா மருத்துவமனையில் மாணவரின் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, டெங்கில் தேசியப் பள்ளியில் (SK Dengkil) முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் உணவு தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.