பாலேக் பூலாவ் தேசிய சேவை முகாமின் வாழ்க்கை வசதிகள் “சிறைச்சாலையில் உள்ளத்தைவிட மோசமாகவுள்ளது” என்று கூறி அங்குள்ள பயிற்சியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
துருப் பிடித்த, உடைந்த கட்டில்களில் படுக்க வேண்டியிருப்பதாகவும் கறைபடிந்த தலையணைகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குளியலறைகளில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதாகவும் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் செய்திருக்கிறார்கள்.
த நியூ ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு பயிற்சியாளர் உணவில் புழு ஒன்றைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் அது கூறியது.
இதபத்தி டி.மோகன் கிட்டே கேட்டு சொல்லுங்கோ.. யாரு கண்டது.. இதுலேயும் அவருக்கு காண்ட்ரேக்ட் இருக்குதோ என்னவோ..
ஒரு வேல இறைச்சி விலை எரிவிட புளுகளை போட்டு
சமய்தர்கோலோ.
இதை பற்றி சம்பந்த பட்டவரிடம் கேட்டால் ” INI ADALAH CUBAAN ” இப்படியெலாம் கஷ்டங்களை அனுபவிப்பதும் ஒரு பயிற்சி! உங்கள் மனநிலையை பார்க்கிறோம் ! என்று சொல்லி மலுப்பிவிடுவார்கள். ஆனால் கோடிகணக்கில் செலவினம் என்று கணக்கு காட்டுவார்கள். இப்படிபட்ட தில்லுமுல்லுகளை சரிசெய்ய ஒரு வழியுண்டு ( நம்ம சொன்னா நடக்காது ) ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு தனி NGO குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் . பயிற்சி ஆரம்பம் ஆவதற்கு முன்பே அனைத்தையும் சரிபார்த்து ,அங்குள்ள தரம் கொள்கை முறையில் ஏற்றுகொண்டாலே பயிற்சியாளர்களை அங்கு அனுப்ப வேண்டும் .நடவடிக்கை எடுப்பார்களா ??