பூமிபுத்ராக்களுக்கு உதவும் திட்டத்தால் பூமி-அல்லாதார் பாதிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் உத்தரவாதம்

1 najib1இன்று மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுக்கும் உதவும் பல்வேறு திட்டங்களை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவற்றால் மற்ற இனத்தவரின் நலன்கள் பாதிக்கப்பட மாட்டா என்பதற்கும் உத்தரவாதம் அளித்தார்.

“மலாய்க்காரர்களுக்குப் பொருளாதார அதிகாரத்தைக் கொடுக்கும் திட்டங்களைத் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

“இதனால் மற்றவர்களின் உரிமைகள் பறிபோகா….மற்ற இனங்களுக்குப் பாரபட்சம் காட்டும் எண்ணம் கிடையாது”, என்றவர் கூறினார்.