குற்றத் தடுப்புச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் இன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு வரும் எனத் தெரிகிறது.
சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்போது, வழக்கமாக சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் அது பற்றி வழக்குரைஞர் மன்றம், போலீஸ் ஆகியோரிடம் பின்னூட்டங்கள் பெற முனையும்.
ஆனால், குற்றத்தடுப்புச் சட்டத் திருத்தத்தின் பிரதி எதுவும் தங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிரிஸ்தபர் லியோங் (இடம்) கூறினார்.
மன்றத்தின் குற்றச்செயல் குழு உறுப்பினர் பல்ஜிட் சிங் சித்து, “அதைத் தாக்கல் செய்யுமுன்னர் வழக்கமாக எங்கள் பார்வைக்கு ஒரு பிரதி கொடுப்பார்கள். ஆனால், இதுவரை கொடுக்கப்படவில்லை”, என்றார்.
அட போங்கையா. உங்களையே அவர்கள் வேண்டாம் என என்னும் போது, உங்களுடன் ஆலோசனை செய்ய என்ன இருக்கின்றது. பகிங்கரமாக அச்சட்ட திருத்தத்தை எதிர்த்து பார் கௌன்சில் ஒரு ‘EGM’ கூட்ட வேண்டியதுதானே.