இன்று காலை குற்றத்தடுப்புச் சட்டத்திற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அத்திருத்தங்களில் ஒன்று, பிரிவு 7பி, ஈராண்டுகளுக்கு விசாரணையின்றி காவலில் வைக்கும் அதிகாரத்தை மீண்டும் அரசாங்கத்துக்கு வழங்குகிறது.
அதற்காக மூவரடங்கிய குற்றத்தடுப்பு வாரியம் ஒன்று அமைக்கப்படும். உயர் நீதிமன்ற நீதிபதி, முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்லது கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவர் அதற்குத் தலைமை தாங்குவார்.
அந்த வாரியத்துக்கு அச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படும் ஒருவரை கூடின பட்சம் ஈராண்டுவரை விசாரணையின்றி தடுத்து வைக்கும் அதிகாரம் கொடுக்கப்படும்.
ஈராண்டுக்கொரு முறை தடுப்புக்காவலை நீட்டிக்கவும் முடியும்.
வாரியத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் முடியாது. சட்டத்தின் பிரிவு 15ஏ அதைத் தடுக்கிறது.
அவசரகாலச் சட்டத்திலும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திலும் விசாரணையின்றி காவலில் வைக்கும் அதிகாரம் இருந்தது கடுமையாகக் குறைகூறலுக்கு இலக்கானது தெரிந்ததே. பீன்னர் அவ்விரு சட்டங்களுமே எடுத்தெறியப்பட்டன.
ஆனால், அதுதான் வன்முறை குற்றப் பெருக்கத்துக்குக் காரணம் என உள்துறை அமைச்சும் போலீசும் கூறி வருகின்றன.
வாரியத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியாது ! அவர்கள் என்ன நீதிபதிகளா ? சட்ட துறை நம் நாட்டுக்கு தேவை இல்லையே ?
எடுத்தெறியப்பட்ட அவசரக்கால சட்டத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கும், தற்போதைய Prevention of Crime Act டிற்கும் எவ்வித வேறுபாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. இச்சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும், ஆளும் கட்சி
ஆட்சி மாற்றமே இதற்கு நல்ல தீர்ப்பாக விளங்கும்…
ஒரு கையில் கொடுத்து மற்றொரு கையில் மீட்டுக் கொள்ளும் உத்தமர் கட்சி அம்னோ! ம.இ.க. ஓட்டுப் போடச் சொல்லி எந்தெந்த மட இந்தியன் அம்னோவுக்கு ஓட்டு போட்டானோ அவனவன் பேச்சுரிமை இத்துடன் பறிக்கப்படும். இந்நாட்டின் ஒரு இனத்துக்காக மக்களை அடிமையாக வைத்திருக்கவே இந்த சட்ட மாற்றமா?