ஜாலோர் கெமிலாங்கை அவமதித்தால் 15 ஆண்டுச் சிறை

1 act2மலேசியக் கொடியை அல்லது வெளிநாடுகளின் கொடிகளைக் காலில் போட்டு மிதித்தல் போன்ற செயல்களின் மூலமாக அவமதிப்போருக்குக் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  இதற்குக் குறைந்தது ஐந்தாண்டாவது  சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய  குற்றவியல்  சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்படுகிறது.  அச்சட்டத் திருத்தம்  இன்று மக்களவையில் முன்வைக்கப்பட்டது.

இன்னொரு கூடுதல்  சட்டத் திருத்தம்,  அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு  ஐந்தாண்டிலிருந்து 15 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.

இன்னொரு திருத்தம், மலேசியாவைப் பிரதிநிதிக்க ஜாலோர்  கெமிலாங்கைத் தவிர்த்து  வேறு கொடிகளைப் பறக்க விடுவோருக்கும்  ஐந்தாண்டிலிருந்து 15 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.

இவ்வாண்டு மெர்தேகாவுக்கு முதல்நாள்,  சாங் சாகா கொடியைப் பறக்கவிட முயன்ற சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இச்சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.