கம்முனிஸ்டுச் சிந்தாந்தத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம் என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலாயா கம்முனிஸ்டுக் கட்சியைப் பெருமைப்படுத்திப் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர்.
டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட உள்ளூர்வாசி ஒருவரும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவரும், கம்முனிஸ்டு கட்சி சின்னங்களையும் நினைவுப்பொருள்களையும் காலஞ்சென்ற சின் பெங்கின் படங்களையும் வைத்திருந்ததற்காக பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்தபோது காலிட் இவ்வாறு கூறினார்.
கொமுனிஸ் சித்தாந்தம் மலேசியாவில் எடுபடாது ! அம்னோதான் பெரிய பில்டாப் பண்ணுகிறான் !
தேவைஇல்லாத பேச்சு, ஐஜிபி யின் முதிர்ச்சியை இது காட்டுகிறது.
அப்படி பார்த்தால் முன்னால் போலிஸ் தலைவர் ரஹீம் நோரை உள்ளே தள்ள வேண்டும். அவர்தான் வக்காளது வாங்கினாரே !
சின் பெங் எனும் சங்கை ஊதி தண்டோரா போட்டது நீங்கதானையா?
உன் அம்னோ சித்தாந்தம் உன்னுடனேயே இருக்கட்டும்…
என்னயா இது நினைவு பொருள் வைத்திருந்தால் கூட தப்பா.
இதட்கே பயம் கண்டுவிட்டது .
கம்னியூசம் என்பது என்ன கொச்சை வார்த்தையா?
கம்யூனிசம் இந்த நாட்டில தலை தூக்க முடியாது என்பது கொஞ்சம் மூளை உள்ளவர்களுக்கே புரியும். நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய வேண்டுமா! என்ன கொடுமை சார் இது!
“நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை..”
நாம் யாருக்கும் அடிமையில்லை, எவருக்கும் பணியவேண்டியதில்லை என்ற சமத்துவ தத்துவத்தை / கம்னியூஸ்ட் தத்துவத்தை அப்பர் பெருமான் 4-ம் நூற்றாண்டிலியே சொல்லிவைத்து விட்டார். நமது பாதுகாப்பு தலைமகன் இதை அறிந்தால் தேவாரமும் பாடக் கூடாது எனக் கட்டளைப் போடுவாரோ?